Tag: சம்பந்தர் தேவாரம்
Tag: சம்பந்தர் தேவாரம்
-
You Are That! – “மாசில்வெண்பொடி”
தேவாரம் இரண்டாம் திருமுறை: சொற்றருமறை பாடினார் சுடர்விடுஞ்சடை முடியினார் கற்றருவடங் கையினார் காவிரித்துறை காட்டினார் மற்றருதிர டோளினார் மாசில்வெண்பொடிப் பூசினார் விற்றருமணி மிடறினார் மேயதுவிள நகரதே. பொ-ரை விளக்கம்: சொற்றருமறை பாடினார்: சொல்தரும் மறை – “எழுதாத புத்தகத் தேட்டின் பொருளை” என திருமூலர் தம் திருமந்திரத்தில் சொல்லியபடி மறைகள், ‘எழுதாக்கிளவி’ யாதலின் கண் வழியே காணும் எழுத்தாலன்றிச் செவிவழியே கேட்டு உணரச் சொல்லால் தரும் உயர்வுடைய வேதம். அதாவது எழுதி உணர்த்தாது சொல்லப்பட்டே வரும் வேதங்களை…
