Category: You Are That!
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 1989 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 சந்திரன் சூரியன் தான்வரின் பூசனைமுந்திய பானுவில் இந்துவந்து ஏய்முறைஅந்த இரண்டும் உபய நிலத்தில்சிந்தை தெளிந்தார் சிவமாயி னரே.”திருமூலர் திருமந்திரம்:1989 “சந்திரன் சூரியன் தான்வரின்”சந்திரன் என்பது இடகலையாக ஒவ்வொருவரின் நாசியில் இடது பக்கமாகவும், சூரியன் என்பது வடகலையாக ஒவ்வொருவரின் நாசியில் வலது பக்கமாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. சந்திரனுக்கு ஒளி சூரியனிடமிருந்து கிட்டுகிறது. சந்திரன் மாத்ருகாரகன், அதாவது ஒவ்வொருவருக்கும் இவ்வுடம்பு கிட்டியது மாதாவின் மூலமாக, எனவே சந்திரன் என்பது அவரவர்களின் தேகமாகவே இருந்து கொண்டிருக்கிறது.…
