Category: SelfRealization
-
கர்மமும் அருளும்
கர்மமும் அருளும்கர்மமும் அருளும்- பொருளும் அதன் தன்மையும் போன்றது;ஒன்றைவிட்டு மற்றொன்றைப் பிரிக்க முடியாதது. உடம்பால் உணர்தல் கர்மம் என்றால்,உணர்வு அருளாகிறது. வாயால் பேசுவது கர்மம் என்றால்,வாக்கு அருளாகிறது. கண்ணால் பார்ப்பது கர்மம் என்றால்,பார்வை அருளாகிறது. செவியால் கேட்பது கர்மம் என்றால்,கேட்கும் திறன் அருளாகிறது. நாசியால் நுகர்வது கர்மம் என்றால்,நுகர்வுணர்வு அருளாகிறது. நினைத்தல் கர்மம் என்றால்,நினைவு அருளாகிறது. அறிதல் கர்மம் என்றால்,அறிவு அருளாகிறது. சுவாசித்தல் கர்மம் என்றால்,காற்று அருளாகிறது. உண்ணுதல் கர்மம் என்றால்,உணவிற்கும் உண்பவனுக்கும் இடையில் உள்ள உறவு…
