Category: Mysticism
-
“உங்கள் சுய வடிவம் ஒளியானது”
இவ்வுலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் ஏழு நிறங்கள், ஏழு ஸ்வரங்கள், ஏழு குணங்களின் கலவைகளே ஆகும். அந்தந்த குணங்களுக்கு ஏற்றவாறு ஸ்வரங்களும், நிறங்களும் ஒன்றுக்குள் ஒன்று கலந்து பற்பல உருவங்களாக காட்சி அளிக்கிறது. இதில் மனிதப்பிறவியை தவிர மற்ற எல்லா ஜீவராசிகளின் இவ்வேழு வகை கலவைகள் கலந்த காட்சிகள் அல்லது உருவங்கள் மாறாது. அது போன்றே அதனதன் குணங்களும் ஸ்வரங்களும். உதாரணமாக நாய் என்னும் பிறவியை எடுத்துக்கொண்டால், அதனிடம் உள்ள நன்றியை வெளிப்படுத்தும் குணம், குரைக்கும் ஸ்வரம்…
