Category: Mysticism
-
“கலையாத கல்வியும், குறையாத வயதும்”-3
“தவறாத சந்தானமும்” இது அபிராமி பட்டர் அன்னை அபிராமியிடம் வைத்த விண்ணப்பங்களின் ஒன்று. ஒரு தவறாத சந்தான பாக்கியம் ஏற்பட காரணமாக விளங்கும் கணவன் மனைவி இவ்விருவரின் சேர்க்கைக்கு, பல முன் இலக்கணங்கள் திருமூலரால் திருமந்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அத்தகைய இலக்கணத்தோடு இணைந்தால் கிட்டும் சந்தானத்தில்… விரும்பும் வகையில் ஆண் அல்லது பெண், நல்ல தீர்க்கமான ஆயுள், அழகு நிறைந்தஅறிவு, ஆரோக்கியம், சத்துவ குணம் நிரம்பப் பெற்ற வீரம், சகல ஐஸ்வர்யங்கள் போன்ற தன்மைகள் உள்ளடங்கிய சந்தானம் பாக்கியம்…
