Category: சன்மார்க்கம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 1532 ன் விளக்கம்:
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்குள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறைஉள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.திருமூலர் திருமந்திரம்: உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்கு:எவரொருவர் தம் இறைவனை, தாம் உயிர் வாழ முதன்மை காரணமாக இருக்கும் உள்ளே போய்க்கொண்டிருக்கும் பிராண வாயுவாகவும், அந்த வாயுவால் புறத்தில் கட்டப்பட்டும், தாங்கப்பட்டும் விளங்கிக் கொண்டிருக்கும் சரீரமாகவும் உணர்கின்றாரோ… உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை: அத்தகையவருக்கு அவர்களின் பிராணனாகவும் சரீரமாகவுமே “இருக்கிறான் இறைவன்” என்று உணர்த்திக்…
