Category: சனாதன தர்மம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 2885 ன் விளக்கம்:
“எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளைத் தெருளாத கன்னி தெறிந்திருந்து ஓத மலராத பூவின் மணத்தின் மதுவைப் பிறவாத வண்டு மணமுண்ட வாறே”. திருமூலர் திருமந்திரம்:2885 “எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளை” ஒருவர் புத்தகத்தில் உள்ள எழுதப்பட்ட எழுத்துக்களை தம் கண்களால் பார்த்து படித்து, அவ்-ஏட்டின் பொருளை அறிந்து கொள்ளலாம். ஆனால் எவ்வகையில் ஒருவர் எழுத்துக்களே இல்லாத புத்தகத்தின் ஏட்டின் பொருளை அறிய இயலும்? இப்பிரபஞ்சம் எந்த ஒரு மொழியையும் பயன்படுத்தாத எழுதாத புத்தகமாக, ‘வான் பற்றி நின்ற…
