
நினைப்பும் மறப்பும் இன்றி…
நினைப்பிலிருந்து நினையாமைக்குச் செல்ல முயல்வதும்,
அல்லது நினைப்பை மறக்க முயல்வதும்—
இவ்விரண்டுமே நடைமுறைக்கு ஒவ்வாதவை.
நினைவுகளின் சிறையிலிருந்து ஒருவர் தம்மை விடுவித்துக்கொள்ள விரும்பினால்…
நினைப்பிற்கும் மறப்பிற்கும் இடையில்,
மிக மெல்லிய நூலிழை போன்றதொரு ஒளிக்கீற்று
இருந்துகொண்டிருக்கிறது.
அதிலேயே, திருவாசி என்னும் தெய்வீக ஒலி பொருந்திய
உள்மூச்சும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது.
ஒருவர் தம் மனதை அடக்கவோ,
அல்லது ஒருமுகப்படுத்தவோ முயலாமல்,
“மறத்தல்” என்ற எண்ணமும் அற்றுப்போக,
உள்மூச்சில் ஒலிக்கும் அந்தத் தெய்வீக சப்தத்தை மட்டும்
இடைவிடாது கேட்டுக்கொண்டே இருந்தால்…
அதன் மூலம்,
நினைப்பிற்கும் மறப்பிற்கும் இடையில் உள்ள
அந்த மையப்புள்ளியிலிருந்து வெளிப்பட்டுக்கொண்டிருக்கும்
ஒளிக்கீற்று தானாகவே தென்படும்.
அந்த ஒளியில்
நினைவுகள் எதுவும் எழாது;
அதுபோலவே மறப்பும் இருக்காது.
மாறாக,
“இருத்தல்” என்னும் விழிப்புணர்வு மட்டுமே
குரு அருளால் நிலைபெற்றிருக்கும்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

