
அறிவியலும் ஆன்மீகமும் சந்திக்கும் புள்ளி: கீதை ஏன் தாவரங்களை ‘தெய்வீகம்’ என்கிறது?
நவீன அறிவியல் பல உண்மைகளைக் கண்டுபிடிப்பதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, நமது முன்னோர்கள் பிரபஞ்சத்தின் ரகசியங்களை மிகத் தெளிவாக உணர்ந்திருந்தனர் என்பதற்கு பகவத் கீதை ஒரு மிகச்சிறந்த சான்று. குறிப்பாக, விபூதி யோகத்தில் பகவான் கிருஷ்ணர் குறிப்பிடும் ஒரு சிறு குறிப்பு, இன்று அறிவியலோடு இணைந்து வியக்கத்தக்க உண்மைகளை வெளிப்படுத்துகிறது.
மரங்களில் நான் அரச மரம்: ஒரு ஆன்மீகத் தேடல்:
பகவத் கீதையின் 10-வது அத்தியாயமான ‘விபூதி யோகத்தில்’, ஸ்லோகம் 26 இல்
अश्वत्थः सर्ववृक्षाणाम्
aśvatthaḥ sarva-vṛkṣāṇām
“எல்லா மரங்களிலும் நான் அஸ்வத்த (அரச) மரமாக இருக்கிறேன்.” என்று
ஸ்ரீ கிருஷ்ணர் தன்னுடைய விபூதிகளை (மகிமைகளை) விவரிக்கும்போது, குறிப்பிடுகிறார்.
அதே அத்தியாயத்தில்,
भूतानामस्मि चेतना (10.22)
bhūtānām asmi cetanā
“எல்லா உயிர்களிலும் நான் சேதனா (உணர்வு, விழிப்புணர்வு) ஆக இருக்கிறேன்.” என்று இன்னொரு இடத்தில், பகவான் கூறுகிறார்.
இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம்: “தாவரங்கள் ஜடப்பொருட்கள் (உயிரற்றவை) என்று கருதப்பட்ட காலத்தில், பகவான் எப்படி ஒரு மரத்தில் தனது விபூதியை, உணர்வை இருப்பதாகச் சொல்ல முடியும்?”
அறிவியலின் கண்டுபிடிப்பு:
கடந்த நூற்றாண்டில், இந்திய விஞ்ஞானி சர் ஜெகதீஷ் சந்திர போஸ் அவர்கள், தாவரங்களுக்கும் மனிதர்களைப் போலவே உணர்ச்சிகள், நரம்பு மண்டலத் துடிப்பு மற்றும் உயிர் உண்டு என்பதை தனது ‘கிரஸ்கோகிராப்’ (Crescograph) கருவியின் மூலம் உலகிற்கு நிரூபித்துக் காட்டினார். இது அறிவியல் உலகில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.
விஞ்ஞானம் மெய்ப்பிக்கும் வரை, ஜடமாகக் கருதப்பட்ட தாவரங்கள், உண்மையில் துடிப்பான உயிரினங்கள் என்பது உறுதியானது. அப்படியானால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதை கீதை எப்படி உணர்த்தியது?
சனாதன தர்மத்தின் பார்வை: அத்வைதம், விசிஷ்டாத்வைதம், மற்றும் த்வைதம்:
நமது தத்துவங்கள் இந்த உண்மையை எவ்வளவு நுட்பமாக அணுகுகின்றன என்பதைப் பாருங்கள்:
விசிஷ்டாத்வைதம்:
பிரபஞ்சத்தில் உள்ள ‘சித்’ (உயிர்கள்) மற்றும் ‘அசித்’ (ஜடப்பொருட்கள்) என அனைத்தும் ஈஸ்வரனின் சரீரமே. அந்த வகையில், அரச மரம் என்பது ஈஸ்வரனின் (உயிரின்) ஒரு உணர்வு வடிவமே. இந்த வடிவம் என்பது உடல் (பொருள்) மனம் மற்றும் சுவாசம் (உணர்வுகள்) இவற்றை உள்ளடக்கியது. அது ஜடமாகத் தெரிந்தாலும், அதற்குள் ஈஸ்வரனின் (உயிரின்) (awareness) ஆற்றல் (சக்தி) உணர்வாக ( consciousness) இயங்கிக் கொண்டிருக்கிறது.
த்வைதம் (Dvaita):
துவி என்றால் இரண்டு.தத்துவம்: கடவுளும் (பரமாத்மா) ஆன்மாவும் (ஜீவாத்மா) என்றென்றும் வெவ்வேறானவை. ஆன்மாக்கள் இறைவனைச் சார்ந்தே வாழ்கின்றன. இறைவன் எல்லா பொருட்களின் உணர்வுகளுக்கும் (consciousness), உயிராக ( சாட்சியாக) (awareness of consciousness) (விளங்குகிறார்.
அத்வைதம்:
“சர்வமும் பிரம்மம்.” இங்கு உணர்வற்றது என்று எதுவுமே இல்லை. உணர்வு என்பது awareness of consciousness, அதாவது பிரம்மத்தின் (உயிரின்) (c²-speed of light squared) உணர்வாக (combination of body, mind and breath) (E and m- energy and mass of matter) எல்லா இடங்களிலும், நிறைந்துள்ளது. நவீன குவாண்டம் இயற்பியல் (Quantum Physics) கூறுவது போல, இந்த உலகம் முழுவதும் ஆற்றலின் (Energy) வெளிப்பாடே தவிர வேறில்லை.
முடிவுரை:
தாவரங்களுக்கு உயிர் உண்டு என்று அறிவியல் மெய்ப்பிப்பதற்கு முன்பே, அந்த உயிரின் ஊற்றுக்கண் பரம்பொருளே என்று கீதை கூறியது, சனாதன தர்மத்தின் பெருமையையும், அதன் தொலைநோக்குப் பார்வையையும் பறைசாற்றுகிறது.
பகவத் கீதை என்பது வெறும் மதம் சார்ந்த நூல் மட்டுமல்ல; அது பிரபஞ்சத்தின் அடிப்படை இயற்பியலை விளக்கும் ஒரு கையேடு. ஒரு விஞ்ஞானி பொருளின் பண்புகளை ஆய்வு செய்கிறார் என்றால், ஒரு ஞானி அந்தப் பொருளின் ஆதார உணர்வை (Essence) தரிசிக்கிறார். இந்த இரண்டு பாதைகளும் ஒரே புள்ளியில் சந்திக்கும்போது, உண்மையை உணரும் அறிவு விரிவடைகிறது.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

