திருமூலரின் திருமந்திரம் உரை எண் 571:

ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

திருமந்திரம்: பிராணாயாமத்தின் அறிவியல் கணக்கு – கூற்றை உதைக்கும் ரகசியம்!
ஆன்மீகத்தின் உச்சம், அறிவியலில் தொடங்கும் புள்ளி எது? பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் சொல்லாத அறிவியலா?  இத்திருமந்திரம் வெறும் மூச்சுப்பயிற்சி (Pranayama) என்பதைக் கடந்து, அணுவியல் மற்றும் ஆற்றல் இயற்பியலின் (Quantum Physics) அடிப்படையிலான ஒரு மாபெரும் ரகசியத்தை நமக்கு விளக்குகிறது.


“ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்,
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவார் இல்லை,
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்குக்,
கூற்றை உதைக்கும் குறியதுவாமே. “

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்:
பொதுவாக பிராணாயாமம் செய்பவர்கள், பிராண அபானங்களை உள்ளே ஏற்றியும் , நிறுத்தியும், பின் அதை வெளியேற்றியும்,, அவ்வாறு செய்வதின் மூலம் மனதில் உருவாகும் தற்காலிக அமைதியிலேயே, திளைத்தும், பூரித்தும் கொண்டிருப்பார்கள்.

காற்றைப் பிடிக்கும் கணக்கறிவார் இல்லை:
இவர்கள் இப் பிராணாயாமங்கள் மூலம் உயிர் வாழ காரணமாய் விளங்கும் காற்று, கட்டுக்குள் வந்ததாக தவறாக கணக்கீட்டு கொள்பவர்கள்.

காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்கு:
ஆனால் ஓம் என்னும் பிரணவ சப்த அதிர்வெண்களை  கொண்ட காற்றைப் பிடிப்பதற்கென்று தனி கணக்கு உள்ளது. பொதுவாக கணக்கு என்பது, கூட்டல், கழித்தல், பெருக்கல், மற்றும் வகுத்தல் என்னும் நான்கு பொது தன்மைகளை உள்ளடக்கியது.

பெருக்கல்:
இவ்வகையில் பெருக்கல் என்பது, காற்று குருவருள் மூலம் ஒருவரின் பிடிக்குள் வரும் போது,  உயிரால், உடம்பு பெருகப்பட்டு (×) …

கூட்டல்:
அதன் மூலம் தெய்வீக தன்மை கொண்ட உயிர் அணுக்கள்  உடம்பினுள் கூட்டப்பட்டு (+) வளரத் தொடங்கும்…

கழித்தல்:
அவ்வாறு நேர்மறை உயிர் அணுக்கள் வளர, வளர, கர்ம  வினைகளால் ஆன எதிர்மறை உயிர் அணுக்கள் கழிக்கப்பட்டு  (-)   அழிய தொடங்கும்…

வகுத்தல்:
சமன்பாட்டில் E = m c2,  E என்பது ஆற்றலைக் குறிக்கிறது, m என்பது ஒரு பொருளின் (உடம்பின்) நிறையை  குறிக்கிறது, இதில் m=0 என்றாகி, m = \frac{E}{c^2},  என்று வகுக்கப்படும் போது (/) …

அதாவது கர்ம வினைகள் கழிந்து உடல் நிறை பூஜ்ஜியமாக  ஆகும் போது,  அந்தச் சமன்பாடு “முறியடிக்கவில்லை” என்றோ அல்லது ஆற்றல் நிச்சயமாக பூஜ்ஜியமாகிவிட்டது என்றோ அர்த்தமல்ல. மாறாக, அது நீங்கள் நிறையற்ற, மாத்திரை என்னும் கால அளவு இல்லாத பிரணவத்தின் அதிர்வெண்களை  கொண்ட ,

1. ஃபோட்டான்கள்: ஒளியின் துகள்கள்.

2.குளுவான்கள்: வலிமையான அணுக்கரு விசையை உருவாக்கும் துகள்கள்.

3.ஈர்ப்புத்துகள்கள்: (கருதுகோள்) புவியீர்ப்பை உருவாக்கும் துகள்கள்.
இவைகளை உள்ளடக்கிய ஒரு துகளைக் கையாளுகிறீர்கள் என்பதைக் குறிக்கிறது. அத்தகைய துகள் ஓய்வில் இருக்க முடியாது, மேலும் அது எப்போதும் ஒளியின் வேகத்தில் பயணித்து, தனது உந்தத்தின் மூலம் மட்டுமே ஆற்றலைக் கடத்துகிறது.

கூற்றை உதைக்கும் குறியதுவாமே:
எமன் (கூற்றுவன்) காலத்தின் கணக்கினால் இயங்குபவன். அவன் உங்களை அணுக வேண்டுமென்றால், உங்களுக்கு ஒரு ‘கால அளவு’ (Time) மற்றும் ‘நிறை’ (Mass) இருக்க வேண்டும்.

எப்போது நீங்கள் பிரணவ ஒளியின் அதிர்வெண்ணோடு ஒன்றி, நிறை அற்ற (Massless) நிலையை அடைகிறீர்களோ, அப்போது நீங்கள் காலத்தின் எல்லையைத் தாண்டிவிடுகிறீர்கள். ஒளியின் வேகத்தில் பயணிக்கும் ஒரு பொருளை அல்லது ஆன்மாவை காலத்தினால் தொடவோ, ஈர்க்கவோ முடியாது. இதுவே “கூற்றை உதைக்கும் குறியது” — அதாவது எமனையும் விஞ்சிய நிலை!

முடிவுரை:
திருமூலரின் இந்த வரிகள், பிராணாயாமம் என்பது வெறும் மூச்சுப் பயிற்சி மட்டுமல்ல, அது ஒரு ஆன்மீக அணுக்கரு மாற்ற (Alchemical Transmutation) வித்தை என்பதை உணர்த்துகிறது. நமது உடலையும் மனதையும் பிரணவ ஒளியின் அதிர்வெண்ணுக்கு மாற்றும் போது, மரணமில்லாப் பெருவாழ்வு சாத்தியமாகிறது.
திருச்சிற்றம்பலம் 🙏

Leave a comment