“மற்றவர்கள் என்று யாரும் இல்லை”

“மற்றவர்கள் என்று யாரும் இல்லை”
ஹஸ்ரத் ஷம்ஸ் தப்ரிஸி என்ற சுபி ஞானி கூறுகிறார்;  முழு பிரபஞ்சமும் மனிதனுக்குள் அடங்கியுள்ளது. சாத்தான் நம்மைப் பொறிக்குள் சிக்க வைக்கக் காத்திருக்கும் ஒரு அரக்கன் அல்ல, அவன் உள்ளிருக்கும் ஓர்க்குரல். உங்கள் சாத்தானை உங்களுக்குள்ளேயே தேடுங்கள், மற்றவர்களிடம் அல்ல. தன் சாத்தானை அறிந்தவன், தன் கடவுளையும் அறிவான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Interpretation:
பிரபஞ்சம் என்பது சப்த பிரம்மத்தின் பிரதிபலிப்பே ஆகும். அதுவே  ஒவ்வொருவர் உள்ளும் தன்னில் தானாகவே இருந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து வெளிப்பட்டதே பிராணனும் , மனமும். அவ்வகையில் பிராணனுக்கும் மனதிற்கும் உற்பத்தி ஸ்தானம் என்பது ஒன்றே என்பது பகவான் ரமண மகரிஷியின் உபதேசம். மேலும் பிராணன் அடங்க மனம் அடங்கும் மனம் அடங்க  பிராணன் அடங்கும் என்பதும் ரமணரின் கூற்று. அதாவது ஒவ்வொருவர் உள்ளும் அடங்கியுள்ள சப்த பிரம்மமானது, மனதின் குரலாக மாறி வெளிப்படும் போது, அம்-மாய மனமானது தனக்கு அந்நியமாக மற்றவர்கள் என்று ஒன்று இருப்பதாக தவறாக கற்பித்துக் கொண்டு, சத்துவம், ரஜோ, மற்றும் தமோ குணம்  என்னும் முக்குண மாயையில் சிக்கிக் கொண்டு, அதன் மூலம் ஒவ்வொருவர் உள்ளிருக்கும் இறைவனை வெளிப்பட விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.

யோக மாயையால் நன்கு மூடப்பட்டுள்ள என்னை மூடர்கள் அறிவதில்லை என்று பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த கருத்தும், அவ்வாறே ஹஸ்ரத் ஷம்ஸ் தப்ரிஸி குறிப்பிட்ட ஒவ்வொருவர் உள்ளும் குடி கொண்டிருக்கும் சாத்தான் என்பதும் இதுவே ஆகும்.

மாறாக எவர் ஒருவருக்கு குரு அருள் கூடுகின்றதோ, அத்தகையவர் தம் பிராணங்கள் வழியாக தம்முள் இருக்கும் சப்த பிரம்மத்தை, குருவை, அல்லது தன் ஆன்மாவை சென்றடையும் மார்க்கத்தை அறிந்து கொள்வதின் மூலம், பிரணவ மந்திரமானது தன்னில் தானாகவே தம்முள் ஒலித்துக்  கொண்டிருப்பதை சதா உணர்ந்தபடியே இருப்பார்கள். அதன் காரணம் மனம் என்னும் சாத்தானை சூழ்ந்துள்ள குரலானது கொஞ்சம் கொஞ்சமாக மங்கி முழுவதும் ஒன்றும் இல்லாமல் ஆகிவிட மனமானது, தன் மூலமான சப்த பிரம்மத்தில், பிராணன்கள் மற்றும் பஞ்சபூத கலவையால் ஆன இத் தேகத்துடன் சேர்ந்து ஒடுங்கி, முற்றிலுமாக கரைந்து போக, இறைவனாக, தன்னில் தானாக ஒளிர்ந்து கொண்டிருப்பார்கள்.

அதாவது ஹஸ்ரத் ஷம்ஸ் தப்ரிஸி அவர்களின் கூற்றுப்படி, மனம் என்னும் சாத்தானை அறிந்தவன் எவனோ அவனே தம் பிராணங்கள் வழியாக தம் உள்ளிருக்கும் இறைவனை அறிவான். அதாவது மற்றவர்கள் என்பதே இல்லை என்றாகி விடும்போது, உள்ளிருக்கும் சாத்தான் மறைந்து இறை ஒளி தென்படும்.
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

ஜெமினி AI ன் பின்னூட்டம் இப்பதிவை பற்றி:
உங்கள் விளக்கம் மிகவும் ஆழமானது மற்றும் தத்துவ ரீதியாக செழுமையானது. பாரசீக ஞானி **ஷம்ஸ் தப்ரிஸி**, அத்வைத ஞானி **ரமண மகரிஷி** மற்றும் **பகவத் கீதை** ஆகிய மூன்றையும் இணைத்து நீங்கள் வழங்கிய ஒப்பீடு, ஆன்மீகத்தின் ஒருமைப்பாட்டை (Universal Truth) அழகாக வெளிப்படுத்துகிறது.
உங்கள் விளக்கத்தின் முக்கிய சாராம்சங்களை இவ்வாறு சுருக்கலாம்:

### 1. பிரபஞ்சமும் மனிதனும் (The Macrocosm within Microcosm)
“முழு பிரபஞ்சமும் மனிதனுக்குள் அடங்கியுள்ளது” என்ற ஷம்ஸ் தப்ரிஸியின் கூற்று, **”அண்டத்தில் உள்ளதே பிண்டம்”** என்ற சித்தர்களின் வாக்குடன் ஒத்துப்போகிறது. வெளியே தேடும் இறைவனும், அஞ்சும் சாத்தானும் நமக்குள் இருக்கும் மனதின் வெவ்வேறு நிலைகளே என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

### 2. மனம்: சாத்தானும் இறைவனும் சந்திக்கும் புள்ளி
* **மனம் எனும் சாத்தான்:** ரமணரின் உபதேசப்படி, மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு. இந்த மனம் “நான்”, “எனது”, “மற்றவர்கள்” என்ற பிரிவினையை உருவாக்கும்போது அது ‘சாத்தான்’ ஆகிறது. இதுவே நம்மை மாயையில் (Illusion) கட்டிப்போடுகிறது.
* **மூலத்தை அறிதல்:** மனதின் மூலத்தைத் தேடிச் செல்லும்போது (Who am I?), அந்த மனம் சப்த பிரம்மத்தில் அல்லது ஆன்மாவில் ஒடுங்குகிறது. தன் பலவீனங்களையும், அகந்தையையும் (சாத்தானை) அடையாளம் காண்பவனே, அதைத் தாண்டி இருக்கும் இறைவனை உணர முடியும்.

### 3. பிராணனும் மனமும் (Breath and Mind)
நீங்கள் குறிப்பிட்டது போல, பிராணனுக்கும் மனதிற்கும் உற்பத்தி ஸ்தானம் ஒன்றுதான்.
> “மனம் அடங்க பிராணன் அடங்கும்; பிராணன் அடங்க மனம் அடங்கும்”
>
என்ற ரமணரின் கூற்றுப்படி, மூச்சைக் கவனிப்பதன் மூலம் அல்லது குருவருளால் பிரணவ நாதத்தை உணர்வதன் மூலம், சத்துவ, ரஜோ, தமோ குணங்களைக் கடந்து அந்தப் பரம்பொருளை அடைய முடியும்.
### 4. யோக மாயையும் குருவருளும்
கிருஷ்ணர் கீதையில் கூறுவது போல, மாயை நம் கண்களை மறைக்கிறது. ஆனால், குருவின் வழிகாட்டுதலால் “மனம்” எனும் திரை விலகும்போது, அங்கே ‘மற்றவர்கள்’ என்ற பேதமே இருப்பதில்லை. எஞ்சி இருப்பது அந்த **ஒரே ஒளியான இறைவன்** மட்டுமே.

> **முக்கியக் குறிப்பு:**
> “மற்றவர்கள் என்று யாரும் இல்லை” என்ற நிலை வரும்போது, அங்கே ஒப்பிடுவதற்கு ஆள் இல்லை, போட்டி இல்லை, பொறாமை இல்லை. அங்கே வெறும் அமைதியும் பேரானந்தமும் மட்டுமே நிலவும்.

> உங்களின் இந்தத் தத்துவப் பார்வை, மதங்களைக் கடந்து ஆன்மீகம் என்பது ‘தன்னையறிதல்’ (Self-Realization) மட்டுமே என்பதை மிகத் தெளிவாகப் பறைசாற்றுகிறது.
**ஸ்ரீ குருப்யோ நமஹ!** 🙏

Leave a comment