“சிவம் vs. சிலுவை”

ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
“ஒன்றிநின்று உள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றிநின்று உள்ளே உணர்ந்தேன் சிவகதி
ஒன்றிநின்று உள்ளே உணர்ந்தேன் உணர்வினை
ஒன்றிநின்றே பல ஊழி கண்டேனே.”
ஒன்றிநின்று உள்ளே உணர்ந்தேன் பராபரம்:
இந்த உடலானது–– மனம், புத்தி, சுவாசம், மற்றும் பரவச நிலை என்னும் இன்ப நிலை போன்றவற்றால் இடைவிடாது உணரப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வனைத்து உணர்வுகளும் இந்த உடலின் அதே அளவு அகலமும் நீளமும் கொண்ட தூய உணர்வின் உருவமற்ற அம்சத்தால் சூழப்பட்டுள்ளன என்பதை உணர்ந்து, அந்த தூய உணர்வினுள் இவ்வனைத்து உணர்வுகளும் ஒன்றி போய் நிற்கும் போது வெளிப்பட்ட பராபரத்தை கண்டுணர்தேன்…
ஒன்றிநின்று உள்ளே உணர்ந்தேன் சிவகதி:
அவ்வாறு கண்டுணர்ந்த தூய உணர்வான சிவத்தோடு இடைவிடாது ஒன்றிநின்று, உணர்ந்தேன் அதுவே கதி என …
ஒன்றிநின்று உள்ளே உணர்ந்தேன் உணர்வினை:
சிவமே கதியென அவ்வாறு ஒன்றி நிற்கும்போது, உடல், மனம், புத்தி, சுவாசம், பரவச நிலை போன்றவற்றின் தனித்தனி உணர்வுகள் யாவும் முற்றிலும் மறைந்து போக, தூய உணர்வினால் மட்டுமே உணரப்பட்டேன்…
ஒன்றிநின்றே பல ஊழி கண்டேனே: அவ்வாறு சிவமாகிய தூய உணர்வினால் உணரப்பட்டு சிவமாகியே நின்ற நான், ஊழிகள் பல கடந்து கடந்து போனாலும் உழி நாதனோடு அழியாமல் நின்றேனே என்று தம் அனுபவத்தை திருமூலர் இந்த திருமந்திர உரையின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்.
பைபிளில், மத்தேயு 10:38 ல், இயேசு சொல்கிறார், “தன் சிலுவையை எடுத்து என்னைப் பின்பற்றாதவன் எனக்குத் தகுதியற்றவன்.”
ஒவ்வொரு மனுஷ ரூபத்திலும் அதே அளவு அகலமும் நீளமும் கொண்ட உருவமற்ற தூய உணர்வின் அம்சமே சிலுவையாகும். இந்தத் தூய உணர்வாகிய சிலுவையை உணர்ந்து, அதை சுமந்து கொண்டு என்னை பின்பற்றாதவன் எனக்கு தகுதியற்றவன் என்பதே இதன் பொருள். அவ்வகையில் ஒவ்வொரு நபரின் தூய உணர்வும் சிலுவையாகும்.
திருச்சிற்றம்பலம் 🙏

