“Sin vs. Blessings”

சிலர் தங்கள் பாவத்தின் ஆழத்தில் இறைவனைக் கண்டடைந்துள்ளனர், வேறு சிலரோ தங்கள் ஆசீர்வாதங்களின் உச்சத்தில் அவரை இழந்துள்ளனர். -ஹஜ்ரத் மௌலானா ரூமி
சித்த பெருமான் ஶ்ரீ அருணகிரிநாதர், ஆதியில் பெண்ணாசையால் பிடிக்கப்பட்டு, அதன் காரணம் பெருநோய் வந்து, அதன் காரணம் தன் சொத்தை எல்லாம் இழந்து, அதன் காரணம் தன் மனைவியையும் இழந்து, உடன்பிறந்த தன் சகோதரியின் மதிப்பையும் இழந்து, அதன் காரணம் அவர் பாவத்தின் ஆழம் வரை சென்று, அதன் பின் தன் தவற்றை உணர்ந்ததால், அதன் காரணம் தம் உயிரையும் மாய்த்துக் கொள்ள முற்பட்ட போது, இறைவனை முருகனாக கண்டடைந்துள்ளனர், இத்தகைய பேரு பெற்றோர் வெகு வெகு சிலர், ஏனெனில் அகங்காரம் என்பது அந்நிலையில் முற்றிலும் அழிந்து போனதால்…
மாறாக இறைவனுடைய ஆசிர்வாதங்கள், பணம், பதவி, புகழ், கல்வி, ஞானம், தேக பலம், அஷ்டமா சித்திகள், என்று பற்பல வகைகளில் உச்சமாக வெளிப்படும் போது, செருக்கு என்னும் அகம்பாவமும் அதனுடன் சேர்ந்தே வெளிப்படும். இச்- செருக்கிற்கு அடிமையானவர்கள், அவரது ஆசீர்வாதங்களின் உச்சத்தில் அவரையே, அதாவது தம் இறைவனையே இழந்துள்ளனர். இத்தகையோர் அநேகராய் இன்றும், மற்றும் என்றும் இருந்து கொண்டிருப்பார்கள்!
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

