“The secret of the Sudarshana Maha Homa”

“சுதர்சன மஹா ஹோமத்தின் ரகசியம்”
சுதர்சன சக்கரம் மனத்தில் எழும் எண்ணங்களால் மட்டுமே இயக்கப்படுகிறது; வேறு எதனாலும் அதை இயக்க முடியாது. எனவே, மற்ற ஆயுதங்களைப் போலல்லாமல், மனம் இடைவிடாமல் நினைத்துக் கொண்டிருப்பதைப் போலவே, அதுவும் எப்போதும் சுழன்றுகொண்டே இருக்கும்!

சுதர்சன சக்கரத்தின் வெளிப்பகுதி நேர் திசையிலும், உட்பகுதி அதற்கு எதிர் திசையிலும் சுழல்கிறது. ‘ தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது புறநானூறு தமிழ் பழமொழி. அதாவது, ஒருவன் நல்லெண்ணத்துடன் சிந்தித்தால், மனதினால் இயக்கப்படும் அந்த சுதர்சன சக்கரம், வெளிப் பிராணனாகவும், பின்னர் உள் பிராணனாகவும் மாறி  சுழன்று, அந்த நபருக்குப் பல நன்மைகளை அளித்து, அவரைக் காக்கிறது. மாறாக, ஒருவன் தீய எண்ணங்களைக் கொண்டிருந்தால், அதே சுதர்சன சக்கரம் வெளிப் பிராணனாகவும், பின்னர்  உள் பிராணனாகவும் மாறி சுழன்று, தீய எண்ணங்களைக் கொண்ட அந்நபருக்குப் பெரும் தீங்கை விளைவித்து, இறுதியில் அவனை அழித்துவிடுகிறது.

ஒவ்வொரு மனிதனும் சக்கரவியூகத்தின் தொடர்ச்சியான சுழற்சியுடனேயே பிறக்கிறான். இது ஆக்கப்பூர்வமான மற்றும் எதிர்மறை எண்ணங்களால் தூண்டப்பட்டு, மறுபிறவிக்கு வழிவகுக்கிறது.  தங்கள் எண்ணங்களையும் சுவாசத்தையும் இணைத்து, இடைவிடாமல் சுழலும் சக்கரவியூகத்தின் சக்திவாய்ந்த மையத்தை அடையக்கூடியவர்களால் மட்டுமே, சுதர்சன சக்கரத்தைத் தாங்கியுள்ள விஷ்ணுவின் கைகளில் அமைதியைக் காண முடியும். சக்கரவியூகத்திற்குள் நுழையும் ரகசியத்தைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள், மீண்டும் மீண்டும் பிறந்து இறந்துகொண்டே இருப்பார்கள்.

எனவே, இந்த சுதர்சன மகா ஹோமம் நடைபெறும் போது, ஒலிபெருக்கிகள், கைபேசிகள், வீடியோ விளக்குகள், மின்விசிறிகள் போன்ற மின்னணு சாதனங்கள் எதுவும் பயன்படுத்தப்படாமலும், இந்த சக்திவாய்ந்த மந்திரத்தின் புனிதமான உச்சரிப்பில் வேறு எந்த ஒலிகளும் குறுக்கிடாமலும் இருந்து, ஒருவர் இந்த சுதர்சன மகா மந்திரத்தின் ஒலியை மட்டுமே தனது மனதில் சரியாக உள்வாங்கிக் கொண்டால், அது பிராண சக்திகளின் வழியாக உடலுக்குள் பரவி, பக்தனின் எண்ணங்களின் ஆதாரமாக வீற்றிருக்கும் மகாவிஷ்ணுவின் கரங்களை அடைந்து, தியானத்தில் ஈடுபடும் அந்த நபருக்கு நித்திய சாந்தியை வழங்கும்.
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

“The secret of the Sudarshana Maha Homa”
The Chakra is powered solely by the thoughts of Sudarshanas arising in the mind; it cannot be operated by anything else. Therefore, unlike other weapons, it will always be spinning, just as the mind is constantly thinking without interruption!

The outside section of the Sudarshana Chakra revolves clockwise, whereas the inner part rotates anticlockwise. The outside section of the Sudarshana Chakra revolves clockwise, whereas the inner part rotates counterclockwise. “Good and evil do not come from others” is a Tamil adage. That is, if a person thinks positively, the Sudarshana Chakra, propelled by the mind, rotates as an exterior breath force and then as an inside breath force, giving and safeguarding the individual with numerous blessings. Conversely, if one harbors detrimental thoughts, the same Sudarshana Chakra turns into an outward breath force and then an interior breath force, inflicting great harm on the individual who holds those evil thoughts and eventually destroying them.

Every human being is born with a continuous rotation of Chakravyuham, which is activated by both constructive and negative thoughts and leads to rebirth. Only those who can connect their thoughts and breathing to reach the powerful center of the constantly spinning Chakravyuham can attain peace in the hands of Lord Vishnu, who wields the Sudarshana Chakra. Those who are unable to understand the secret of entering Chakravyuham will continue to be born and die repeatedly.

Therefore, during the performance of this Sudarshana Maha Homam, if no electronic devices such as loudspeakers, cell phones, video lights, fans, etc., are used, and if no other sounds interfere with the sacred chanting of this powerful mantra, and if one properly absorbs the sound of this Sudarshana Maha Mantra alone into their mind, it will circulate internally through the vital energies, reach the hands of Lord Mahavishnu, who resides as the source of thoughts of the devotee, and grant eternal peace to the person who is concentrating.
Sri Gurubhyo namaha 🙏

Leave a comment