
இறைவனின் அருள் உங்களை வழிநடத்தும் விதத்திலேயே நீங்கள் செயல்படுங்கள். ~ ஸ்ரீ ரமண சன்னிதி முறை, பாடல் 971.

Interpretation:
பிரபஞ்சத்தில் உள்ள மொத்த மனங்களின் எண்ணிக்கை ஒன்றுதான். உண்மையில், உணர்வு என்பது அனைத்து உயிரினங்களுக்குள்ளும் இயங்கும் ஒருமைத்தன்மை ஆகும் என்பது எர்வின் ஷ்ரோடிங்கர் என்பவரின் கூற்று. இவர் நோபல் பரிசு பெற்ற குவாண்டம் பொறியாளர் ஆவார்.
அதாவது ஒவ்வொரு உயிரினங்களிலும் உள்ள உணர்வு என்பதே இறைவனின் அருளாக வெளிப்படுகிறது. அது எல்லா மனிதர்களின் மனதில் இருந்து வெளிப்படும் ஒரே ஆற்றலாக இருக்கிறது .
அவ்வகையில் ஒருவர் தம்மை தனி நபர் மற்றும் தனி உருவமாக கருதும் வரை அவரிடமிருந்து வெளிப்படும் மனதின் ஆற்றல் அல்லது உணர்வு, சமுத்திரத்தின் ஒரு துளி அளவு போன்று, இறை அருளை அதாவது அவரின் வழி நடத்துதலை ஒரு துளி அளவே, தம் அறிவுக்கு எட்டிய தூரம் வரையிலேயே உணர முடியும். அது அமைதியின்மைக்கு வழிவகுக்கும்.
மாறாக எவரொருவர் தன் பெயரையும் உருவத்தையும் நீக்கும் வல்லமை பெற்றவரோ அத்தகையவரிடமிருந்து இறையருளானது, ஒரே மனதின் அல்லது உணர்வின் ஆற்றலாக, சமுத்திரம் போன்று அளப்பரியதாக வெளிப்பட்டு, அதன் மூலம் இறைவனின் அருளாகிய வழிநடத்துதலை தம் முடிவு பரியந்தம் உணர முடியும். அது அவர்களுக்கு நிரந்தர அமைதியை கொடுக்கும்.
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏

