
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
“உருவன்றியே நின்று உருவம் புணர்க்கும்
கருவன்றியே நின்று தான் கருவாகும்
அருவன்றியே நின்ற மாயப் பிரானைக்
குருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே”
உருவன்றியே நின்று உருவம் புணர்க்கும்:..
தோன்றா நிலையில், உருவாகாமலேயே நின்று கொண்டிருந்த உயிர் வித்தான விந்தணு, ஆண் பெண் என்னும் இரு உருவங்களும் புணர்க்கும் அதாவது இணையும் போது…

கருவன்றியே நின்று தான் கருவாகும்:
பூ கர்பாய நமஹ ! என்பது பரம்பொருளை போற்றித் துதிக்கும் ஒரு ஸ்லோகம். அதாவது தோன்றா நிலையில், கருவன்றியே நின்று கொண்டிருந்த சிவம், தானே ஆணின் வழியாக உயிர் வித்தான ஓர் விந்தணுவாகி, பெண்ணின் கர்ப்பத்தில் கருவாகி…
அருவன்றியே நின்ற மாயப் பிரானை: அவ்வாறு கருவாகியும், உருவமற்றவராகவே நின்ற சிவம், மானுடப் பிறப்பாக, உருவம் உடையதாக பெண்ணின் கர்ப்பத்தில் இருந்து வெளிப்பட்ட பின்பும், அவ்- உருவினுள் கண்களுக்குப் புலப்படாத உருவமற்றவனாகவே நிற்கும் மாயப் பிரானை…
குருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே;
குருவின் அருள் இன்றி, உருவமன்றியே நிற்கும் அச் சிவத்தை அறிந்து, உணர்ந்து அதனுடன் கூடுதல் என்பது யாவர்க்கும் இயலவே இயலாத ஒன்று.
திருச்சிற்றம்பலம் 🙏

