ஸ்ரீ சிவ ஸகஸ்ர நாமம்-1

ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

ஓம் அனகயா நமஹ ! என்ற 73 வது சிவ சகஸ்ர நாமம்.

‘அனகயா’ என்பதற்கு வெள்ளை கடுகு, பாவமற்ற மற்றும் குற்றமற்ற என்று சமஸ்கிருதத்தில் பொருள்கள் உள்ளது.

வெண் கடுகை தூபமாகப் போடும்போது, அதன் காரம் தீய சக்திகளையும், எதிர்மறை ஆற்றலையும் விரட்டி, அதன் மூலம் ஒருவரை பாவமற்றவராக ஆக்கிவிடும் என்று நம்பப்படுகிறது. ஒவ்வொரு மானுட உடம்பிலும் நாபிக் கமலத்தில் உயிர்வித்துவாக மறைந்துள்ளது வெள்ளை கடுகு போன்ற ஓர் விந்தணுவே.

ஓம் அனகயா நமஹ ! என்ற 73 வது சிவ சகஸ்ர நாதம், வெள்ளை கடுகை ஒத்த உயிர் வித்தாக நாபிக் கமலத்தில் குடி கொண்டிருக்கும் விந்தணுவோடு, நாத விந்துவாக கலந்து, அது தூபமாக உடல் முழுவதும் வியாபித்து, அதன் காரம் மனதில் எழும் தீய சக்திகளையும், எதிர்மறை ஆற்றலையும் விரட்டி…

இந்நாமத்தை, இவ்வாறாக, அதாவது நாத விந்துவுடன் கலந்து உச்சரிப்பவரை பாவமற்றவராக குற்றமற்றவராக ஆகிவிடும்.
திருச்சிற்றம்பலம் 🙏