
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும்
வென்று மிருந்து விகிர்தனை நாடுவர்
சென்றும் இருந்தும் திரு உடையோரே.
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து:
ஒருங்குதல் என்பதற்கு ஒன்றாக புணர்தல் என்று பொருள் உள்ளது. உடம்பில் உள்ள மூலாதார சக்தியும், வெளி உள் என்னும் இரு பிராணங்களும் புணர்ந்த காலத்து…
நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும்: நிலம் என்பது இடத்தை குறிப்பிடும் சொல், அவ்வகையில் மூலாதார சக்தியும், பிராணங்களும் தங்கியிருக்கும் இடமான இவ்வுடம்பானது நின்று கொண்டும், இருந்து கொண்டும், பலவாறாக பேசிக் கொண்டிருந்தாலும்…
வென்று மிருந்து விகிர்தனை நாடுவர்: ஐம்புலன்களுக்கும், ஐம்பொறிகளுக்கும் இருப்பிடமான நிலமெனும் இவ் உடம்பை வென்று, விகிர்தனை: இறைவனை இடைவிடாது நாடுபவர்கள்…
சென்றும் இருந்தும் திரு உடையோரே: எங்கு சென்றாலும் இருந்தாலும் திரு என்னும் தெய்வத்தன்மை கொண்டவர்களாய், அருள் மனம் உடையவர்களாகவே விளங்குவார்கள்.
திருச்சிற்றம்பலம் 🙏

