
“ஒரு மனிதன் மரணத்திற்கு பயப்படக்கூடாது, ஆனால் அவன் ஒருபோதும் மீண்டும் வாழத் தொடங்காமல் இருக்க பயப்பட வேண்டும்.” – மார்கஸ் ஆரேலியஸ், இவர் கி.பி 2 ஆம் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசராகவும், புகழ்பெற்ற ஸ்டோயிக் தத்துவஞானியாகவும் இருந்தார்.
இதன் உட்பொருள், தற்போது அரிதிலும் அரிதாக கிடைக்கப்பெற்ற இம்மனித உருவில் வாழ்ந்து கொண்டிருக்கும் உயிரானது, இறந்தபின் அறியாத வேறு எந்த உருவில் புகுந்து வாழும் என்பதை தற்போதே அறிந்தால், நிச்சயம் பயம் ஏற்படும். அந்த பயம் காரணமாக அவன் உயிர் மீண்டும் வேறொரு உருவில் புகுந்து வாழத் தொடங்க பயந்து, தமக்கு கிடைத்துள்ள இம்மனித உருவையே தன் நிரந்தர இருப்பிடமாக ஆக்கிக் கொள்ள முயலும்.

வள்ளுவர் பெருமானும் இக்கருத்தின் அடிப்படையில் ஒரு திருக்குறளை மார்கஸ் ஆரேலியஸ் வாழ்ந்த காலத்திற்கு முன்பே நமக்கு கொடுத்துள்ளார்.
“புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.” குறள் எண்:340
பொருள் : இவ்வுடம்பினுள் ஒரு மூலையிலே குடியிருந்த உயிருக்கு, நிலையாக புகுந்து தங்கியிருப்பதற்குரிய தகுதிவாய்ந்த ஓர் இடம் அமையவில்லை போலும்! என்று.
அதுபோன்றே குர்ஆனின் 56:61 வசனம் கூறுகிறது, “அதில் உங்கள் உருவங்களை மாற்றி, நீங்கள் அறியாத வடிவத்தில் உங்களை உருவாக்குவோம்.” மனிதர்களை மண்ணாகவோ, விலங்குகளாகவோ, கற்களாகவோ மாற்றுவது போன்ற அவர்களுக்குத் தெரியாத வடிவத்தில் மனிதர்களை மாற்றியமைக்கும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு உண்டு என்பதை இந்த வசனம் உணர்த்துகிறது.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

