
Ashtavakra Gita in Chapter 20:14 as his last sentence. “Nothing proceeds out of me”.
“எனக்கு முன் ஏதுமே இல்லை” அஷ்டாவக்ர கீதை:20:14
ஆன்ம சக்தியானது பார்ப்பவராக எல்லா உயிரினங்களிலும் ஒரே சக்தியாக ஊடுருவி நிற்கின்றது. எனினும் கண்கள் என்னும் புலன்களினால் அது பிளவு பட்டது போல் தோன்றி, ஒன்றுக்கொன்று உயிர்களால் வேறுபாடாக உணரப்படுகிறது.
பூமியின் சுழற்சி சக்தியை நாம் தனியாக வேறுபாடாக உணரவில்லை, ஏனென்றால் நாம் அதனுடன் சீரான, நிலையான வேகத்தில் நகர்கிறோம், அது போன்று எண்ணற்ற கண்களின் வழியாக பார்வை வெளிப்பட்டுக் கொண்டிருந்தாலும், பார்ப்பவன் என்னும் ஆன்ம சக்தி ஒன்றே என்ற ஞானம் உதயமானால், கண்கள் என்னும் புலன்களினால் பிளவு பட்டு ஒன்றுக்கொன்று வேறுபாடாக உயிர்களுக்கு தோன்றுவது மறைந்து போகும்.
இவ்வாறு பார்ப்பவராக எல்லா உயிரினங்களிலும் ஒரே சக்தியாக விளங்கும் ஆன்மாவே, கேட்பவராகவும், நுகர்பவராகவும், பேசுபவராகவும், உணர்பவராகவும், நினைப்பவராகவும், அறிபவராகவும், ஆனந்திப்பவராகவும், மற்றும் எல்லாவிதமான அசைவுகளாகவும் வெளிப்படுவதை உணரும் போது அவ்-ஆன்மா அறியப்பட்டதாக ஆகிறது.
இவ்வாறு ஆன்ம சக்தியை ஒரே சக்தியாக ஐம்புலன்கள் வழியாக உணர்ந்த ஒருவன் தனக்கு முன், பார்ப்பவன் நினைப்பவன் அறிபவன் என்று அந்நியமாக ஏதுமே இல்லை என்ற நிலையை உணர்வான்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

