

“Everything comes in time to him who knows how to wait.” – Leo Tolstoy
“காத்திருக்கத் தெரிந்தவனுக்கு எல்லாம் சரியான நேரத்தில் வரும்.” – லியோ டால்ஸ்டாய்.
எவ்வாறு ஒரு மாமரத்து விதையை பூமியில் நட்டால் அது செடியாகி, மரமாகி, பூக்களாய் பூத்து, காயாகி, கனியும் நேரத்தை அறிந்தவனுக்கே காத்திருக்கவும் தெரியும், மாமரமும் உரிய நேரத்தில் பலன்களை கொடுக்கும். அது போன்றே ஒவ்வொரு செயலுக்கும் உரிய கனியும் நேரத்தை அறிந்தவனுக்கே காத்திருக்கத் தெரியும், எல்லாம் சரியான நேரத்தில் வரும்
எடுத்துக்காட்டாக அசோகவனத்தில் சீதா பிராட்டியும், மதங்க முனிவர் ஆசிரமத்தில், சபரியும், ஸ்ரீ ராமபிரானின் வருகை நேரத்தை அறிந்து, அதற்குரிய முறையில் காத்திருக்க தெரிந்திருந்தார்கள், ஸ்ரீ ராமபிரானும் சரியான நேரத்தில் வந்தார்.
அவ்வாறின்றி செயலுக்குரிய பலன் கனியும் நேரத்தை கணிக்கத் தெரியாதவர்கள், காத்திருக்கத் தெரியாமல் செயல் முடிந்த உடனே பலனை எதிர்பார்த்தால், எவ்வாறு மாமரம் கனியும் நேரத்தை அறியாமல், விதை முளைத்தவுடன் குடம் குடமாக நீரை ஊற்றி கனிகளை எதிர்பார்த்தால் எவ்வளவு அறியாமையோ! அவ்வளவு அறியாமையாகும்!!
பைபிளில் மத்தேயு 25:1-13 இல் இது காணப்படுகிறது. இதில் பத்து கன்னிகைகளில் ஐந்து பேர் மணவாளன் வருகையை கனித்து, அறிந்து காத்திருக்கத் தெரிந்தவர்களாய் புத்தியுடனும், ஐந்து பேர் மணவாளன் வருகையை கணிக்க அறியாமல் காத்திருக்கத் தெரியாதவர்களாய் புத்தியில்லாமலும் இருந்தனர். மணவாளன் வருகையை கணிக்க தெரியாத, எண்ணெய் தீர்ந்துபோன (உணர்வற்றுப்போன) காத்திருக்கத் தெரியாத புத்தியில்லாதவர்கள், அவனைக் காண முடியாமல் போனதால் பரலோக ராஜ்ஜியத்திற்கு மறுக்கப்பட்டனர்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

