“எண்குணத்தான்”

மேலே உள்ள படம் ராமசாமி கோவிலில் எடுக்கப்பட்டது. அதில் ஸ்ரீ ராமபிரான்  வெவ்வேறு கோணங்களில், எதிரும் புதிருமாக தோன்றிய ஏழு மறாமரங்களை, தன்னுடைய ஒரே ராம பானத்தால்   அடித்து வீழ்த்துவது போல் அழகாக சித்தரிக்கப் பட்டிருந்தது.

இதன் மெய்பொருள் ஏழு மறாமரங்களும் காமம், குரோதம், துவேஷம், லோபம், மோகம், மதம், மாத்சரியம் என்னும் ஏழு குணங்களை குறிக்கின்றது. பொதுவாக ஒரு குணத்தின் தன்மை வெளிப்படும் போது மற்ற குணங்களின் தன்மைகள் மறைந்தே இருக்கும்.  ஏழு குணங்களின் தன்மைகளும் ஒரே நேரத்தில் எவருக்கும் தோன்றாது. ஆனால் இவ் ஏழு குணங்களின் தன்மைகளையும் ஒரே நேரத்தில் தம் ஞானக்கணையால் எவர் ஒருவரால் சம்ஹாரம் செய்ய இயலுமோ அத்தகையவரே வள்ளுவர் கூறும் எண்குணத்தான் என்னும் அரிய, உயரிய, தெய்வீக நிலைக்கு பாத்திரமாவார்கள்.

அதற்கு ஸ்ரீ ராமபிரானின் அருள் என்னும், ராமபானமான, ஞானபானம் கிடைக்கப் பெற்றால், ஏழு மறாமரங்களை. ஒத்த இவ்வேழு குணங்களையும் ஒரே நேரத்தில் சம்ஹாரம் செய்து  எண்குணத்தான் என்னும் தெய்வீக நிலைக்கு உயரலாம்.

“கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை”
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0yKTajg7pemJNTRP9hgutuqeMWcYARRUEZzDPWUygTuqR84kUmfrA4TewuPF1jTtZl&id=61573383111125

Leave a comment