
“உமையும், உமையொருபாகனும் ஏக உருவில் வந்து இங்கு எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்: அபிராமி அந்தாதி பாடல் 31
ஓம் பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதாச்யதே பூர்ணஸ்ய பூர்ணமதாய பூர்ணமேவாவசிஷ்யதே’ : இது உபநிஷத்தில் உள்ள சாந்தி மந்திரம்.
ஓம்’ தோற்றத்திற்கு அப்பால் உள்ளது பூரணம்: தோன்றியுள்ளதும் பூரணம்: பூரணத்திலிருந்து பூரணம் உதயமான பின்பும் பூரணமே எஞ்சி இருக்கிறது: என்பது இதன் பொருள்.
உமையும்: உமையவள் ‘ஓம் ‘ என்னும் பிரணவமாக, தோற்றத்திற்கு அப்பால் உள்ள பூரணத்தின் முழு ஆற்றலின் பண்பாக potential energy or unmanifested energy யாக விளங்குகிறாள், அறிவியலின் படி, சாத்திய ஆற்றலாக விளங்கும் அவளை உருவாக்கவோ அழிக்கவோ அல்லது பிரிக்கவோ முடியாது, மாறாக வெளிப்படாத வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மட்டுமே மாறக்கூடியவள்.
உமையொருபாகனும்: அத்தகைய உமையவளில் ஒரு பாகமாக அதாவது சக்தியின் ஒரு பாகமாக, தோற்றத்திற்கு அப்பால் உள்ள பூரணத்திலிருந்து தோன்றியுள்ள பூரணமாக – சிவம் மற்றொரு ஆணுருவம் கொண்ட சக்தியாக kinetic energy or manifested energy யாக வெளிப்பட்டு, சிதைவு அல்லது அழித்து இனப்பெருக்கம் செய்யும் இயக்க ஆற்றலின் வடிவமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
அவ்வாறு உமையவளிலிருந்து உமையொருபாகன், அதாவது பூரணத்திலிருந்து பூரணம் தோன்றிய பின்னும், உமையவள் பூரணமாக தனித்து எஞ்சியே நிற்கிறாள். அதனாலதான் உமையொருபாகனாக உமையவள் மாறிய பின்பும், பூரணமாகவே எஞ்சி இருப்பதால் உமையும் என்று முதலாவதாக அவளை தனித்து அபிராமி பட்டர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஏக உருவில் வந்து: சக்தியும் சிவமும் கலந்த ஏக உருவாக அதாவது அருவமும் உருவமும் கலந்த ரூபா ரூபம் என்னும் ஒளி உருவாக என்னுள் வந்து,
இங்கு எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்: அதை ஒளிக்கும் பராசக்தியாக, தன் உணர்வாக எம்முள்ளேயே உணர வைத்து, அன்பு செய்ய வைத்தாய்.
தான்அறி யான்பின்னை யார்அறி வாரே? திருமூலர் திருமந்திரம்:
இவ்வுடம்பை தனதாக்கிக் கொண்டு தன் உணர்வாகவே எம்முள் ஒளிரும் உமையவளை தான் அறியாமல், வேறு எவர் எம்முள் இருக்கும் அவளை அறிவார்?
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

