திருமூலர் திருமந்திரம் உரை எண் 1797 ன் விளக்கம்:

நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை,
வான்அறிந் தார் அறி யாது மயங்கினர்,
ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்,
தான்அறி யான்பின்னை யார்அறி வாரே?

நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை:
ரூபா ரூபம்-ப்ரதிரூபோ-பபூ வ தத்ஸய ரூபம் ப்ரதிசஷ்ணாய!
அப் பரம்பொருள் ஒவ்வொரு உருவத்திலும் அதே உருவமாகவே ஆயிற்று. அவ்விதம் உருக்கொண்டது தன்னை வெளிகாட்டுவதற்காக! இவ்வாறு பிரஹத்ஹாரண்யகோ உபநிஷத்: 2-5-19ல் சொல்லப்பட்டுள்ளது.

அதாவது ஒவ்வொருவர் உருவும் பரம்பொருளான ஈசனின் உருவமே ஆகும். மேலும் அவ்- உருவம் உருவாகுவதற்கு முன்பும் ஆதி முதலாய் ஈசன் மட்டுமே தன்னைத் தானே அறிந்து கொண்டு இருந்து கொண்டிருக்கிறார்.

வான்அறிந் தார் அறி யாது மயங்கினர்: அவ்வாறு தம் உருவின் உள்ளும் பரம்பொருளான ஈசன் தம் உருவமாகவே, தம்மை  வெளிப்படுத்திக் கொள்வதற்காக, மறைபொருளாக மறைந்து உள்ளதை அறியாமல், வான் பற்றி என்ற மறையை, வேத மொழிகளை மட்டும் மெய்ப்பொருள் உணராமல் அறிந்தவர்கள், ஈசனை அறியாது மயங்கி கொண்டிருக்கிறார்கள்.

ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்:
அவ்வாறு  ஊன் என்னும் தம் உடம்பின் வடிவாகவும் ஈசனே உருக் கொண்டுள்ளான் என்பதனை அவன் அருளாலே அறிந்து, அதன் மூலம் உடம்பினுள் உயிர் வித்தாக அருட்பெருஞ்ஜோதியாக குடி கொண்டிருக்கும் ஈசனை…

தான்அறி யான்பின்னை யார்அறி வாரே?

இவ்வுடம்பை தனதாக்கிக் கொண்டிருக்கும் தன்- உணர்வான தான் அறியாமல், வேறு எவர் எம்முள் இருக்கும் ஈசனை அறிவார்?
திருச்சிற்றம்பலம், 🙏

Leave a comment