ஆதிசங்கரரின் நிர்வாண சதகம்:
ஶ்ரீ ஆதிசங்கரரின் நிர்வாண சதகம்:
ஸ்லோகம் 1
மனோ புத்தி அஹங்கார சித்தானி நாஹம்
ந ச ஷ்ரோத்ரஜிஹ்வே ந ச க்ராண நேத்ரே
ந ச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயுஹு
சிதானந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்
நான் மனமும் அல்ல, புத்தி, அஹங்காரம் அல்லது சித்தமும் அல்ல, நான் காதுகளும் அல்ல, தோல், மூக்கு அல்லது கண்களும் அல்ல, நான் ஆகாயம் அல்ல, பூமியும் அல்ல, நெருப்பு, நீர் அல்லது காற்றும் அல்ல,
ஶ்ரீ ஆதிசங்கரரின் நிர்வாண சதகம்:
சுலோகம் 2.
ந ச ப்ராண சங்யோ ந வை பஞ்ச வாயுஹு
ந வா சப்த தாதுர் ந வா பஞ்ச கோஷ:
ந வாக் பாணி-பாதம் ந சோபஸ்த்த பாயு:
சிதானந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்
நான் பிராணனும் அல்ல, உடலின் ஐந்து வாயுக்களும் அல்ல, நான் உடலின் ஏழு தாதுக்களும் அல்ல, ஐந்து கோசங்களும் அல்ல, நான் பேச்சிற்கான உறுப்பும் அல்ல, கைகள், கால்கள், பிறப்புறுப்பு அல்லது குதமும் அல்ல,
ஶ்ரீ ஆதிசங்கரரின் நிர்வாண சதகம்:
சுலோகம் 3.
ந மே த்வேஷ ராகௌ ந மே லோப மோஹௌ
ந மே வை மதோ நைவ மாத் சர்ய பாவஹ
ந தர்மோ ந ச்சார்தோ ந காமோ ந மோக்ஷஹ
சிதாநந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்
என்னுள் வெறுப்பும் விருப்பும் இல்லை, பேராசையும் மதிமயக்கமும் இல்லை, எனக்குள் பெருமை, கர்வம் அல்லது பொறாமை இல்லை, எனக்கு கடமை இல்லை, செல்வம், காமம் அல்லது முக்தியில் ஆசையும் இல்லை,
ஶ்ரீ ஆதிசங்கரரின் நிர்வாண சதகம்:
ஸ்லோகம் 4.
ந புண்யம் ந பாபம் ந சௌக்யம் ந துக்கம்
ந மந்த்ரோ ந தீர்த்தம் ந வேதா ந யக்ஞஹ
அஹம் போஜனம் நைவ போஜ்யம் ந போக்தா
சிதானந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்
எனக்கு நல்வினை தீவினை இல்லை, இன்பம் துன்பம் இல்லை, மந்திரம், தீர்த்தம், வேதம், வேள்வி, சடங்குகளும் இல்லை, நான் அனுபவமோ அனுபவிக்கப்பட்டதோ அல்லது அனுபவித்தவனோ அல்ல,
ஶ்ரீ ஆதிசங்கரரின் நிர்வாண சதகம்:
ஸ்லோகம் 5.
ந மே ம்ருத்யு ஷங்கா ந மேஜாதி பேதஹ
பிதா நைவ மே நைவ மாதா ந ஜன்மஹ
ந பன்துர் ந மித்ரம் குரூர் நைவ சிஷ்யஹ
சிதானந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்
எனக்கு மரணம் இல்லை, மரண பயமும் இல்லை, சாதி, மதம் இல்லை, எனக்கு தந்தையும் இல்லை, தாயும் இல்லை, ஏனென்றால் நான் பிறந்ததுமில்லை, உறவினரோ, நண்பனோ, குருவோ அல்லது சீடனோ எனக்கு இல்லை !
Interpretation:
ஆனால் இவை ஒவ்வொன்றும் அறியாது தாம் தூய உணர்வின் அம்சமாக அதாவது உணர்வின் உடலாகவே இருந்து கொண்டிருப்பதை!
இவ்வாறு இவைகள் தம் புலன்களை புலன்களாகவும், பொறிகளை பொறிகளாகவும், ஒவ்வொன்றையும் அதனதனாக அறியாமல்,
“அருளறிவு” கொண்டு ஒவ்வொன்றையும் தம் தூய உணர்வின் உடலாகவே, அதாவது உணர்வின் அம்சமாகவே உணரும்போது, அழியாத் தன்மை அத்தேகத்திற்கு கிட்டும்.
அதாவது அங்கு மனம், மனமாகவோ அறிவு, அறிவாகவோ, தந்தை தந்தையாகவோ, தாய் தாயாகவோ, குரு குருவாகவோ அல்லது சீடன் சீடனாகவோ, ஒவ்வொன்றும் அதனதனாகவோ வெளிப்படாது, மாறாக இவையனைத்தின் தனித்தனி தன்மைகள் யாவும் மறைந்து போக, தூய உணர்வொளி ஒன்றே சுடக்கு இல்லாமல் தொடர்ந்து பிரகாசிக்கும்.
மாறாக இவையனைத்தின் தனித்தனி தன்மைகள் யாவும் மறைந்து போக, தூய உணர்வொளி ஒன்றே சுடக்கு இல்லாமல் தொடர்ந்து பிரகாசிக்கும்.
ஸ்ரீ குருப்யோ நமஹ, 🙏

