
அவ்வையின் கொன்றை வேந்தன் பாடல்:
91.ஓதாதார்க் கில்லை யுணர்வொடு மொழுக்கம்
மெய்பொருள்:
ஓதாதார்க்கு – எதை ஓதாதவருக்கு?
“ஊன்பற்றி நின்ற உணர்வொரு மந்திரம்” என்று திருமூலர் தம் திருமந்திரத்தில் சொல்லி உள்ளபடி ‘ஊன்’ என்னும் இவ்- மனித உடம்பை சதாபற்றி நிற்கும் ‘உணர்வு’ என்பது சதா ஓதக்கூடிய ஒரு மந்திரமாக, மறைபொருளாக இருந்து கொண்டிருக்கிறது. அவ்வுணர்வை முறையாக அறிந்து ஓதாதார்க்கு… அவர்களது தேகத்தில் மெய்யுணர்வோடு கூடிய ஒழுக்கம் என்பது ஒருபோதும் உண்டாகாது. இத்தகையவர்கள் ஒழுக்கம் உள்ளது போல் தோன்றுவது மற்றவர்கள் அறியத்தானே அன்றி, அவர்களது மனசாட்சிக்கு உட்பட்டு இருக்காது!

