
இன்று அபரா ஏகாதசி, இந்த அபரா ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்களை, விஷ்ணுவின் கையில் இருக்கும் சக்ராயுதம் தீய சக்திகளிடமிருந்து அவர்களை காத்தருளும் என்பது ஒரு நம்பிக்கை.
சக்கரம் சுற்றுவதை தொடங்கும் போது, முதலில் அது பின்னோக்கி சுழன்று பின் முன்னோக்கி வேகமாக சுழல ஆரம்பிக்கும். அபரா என்பது பரா என்னும் நேர்விசைக்கு எதிரானது என்பது பொருள்.
அதாவது இந்த அபரா ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்களை தீய சக்திகளிடமிருந்து வேகமாக சுழன்று காப்பாற்றுவதற்கு, சக்கரத்தாழ்வார் அபார என்ற பின்னோக்கு சக்தியாக முதலில் சுற்றி பின் பரா என்னும் முன்னோக்கு சக்தியாக உருவெடுப்பார்.
இவ்வாறாகவே அபரா ஏகாதசி விரதம் இருந்த அம்பரீசன் என்னும் மன்னனை, துர்வாச முனிவரால் ஏவி விடப்பட்ட பூதம் என்னும் தீய சக்தி தாக்க வந்த போது, மன்னன் அழைக்கும் முன்பே சக்கராயுதம் அபார சக்தியிலிருந்து பரா சக்தியாக மாறி வேகமாக சுழன்று வந்து அத்தீய சக்தியை அழித்து மன்னனை காப்பாற்றியதாக புராணக்கதை சொல்கிறது.
ஸ்ரீ குருப்யோ நமஹ, 🙏

