“சிவமும் அன்பும்”

“எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி
எரிசுடராய் நின்ற இறைவா போற்றி”

“அன்பு மரத்தில் வளர்வதோ அல்லது சந்தையில் கொண்டு வரப்படுவதோ அல்ல, ஆனால் ஒருவர் தாம் அன்புக்குரியவராக ஆக விரும்பினால், முதலில் அன்பை எப்படிக் கொடுப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டும்” என்று சந்த் கபீர்தாஸ் கூறுகிறார்.

ஒருவர் மற்றவருக்கு எவ்வாறு அன்பை  கொடுப்பது? உண்மையான அன்பின் தன்மை ஒருவரின் கண்களின் ஒளியிலிருந்து தான் தோன்றும். 
“எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி
எரிசுடராய் நின்ற இறைவா போற்றி”  என்பது அப்பர் பெருமானின் பதிகம்.

அதாவது தம் கண்களில் ஒளிரும் ஒளியில் எரிசுடராய் நிற்கும் இறைவனை உணர்ந்தவர்களுக்கு, தோன்றும் யாவும் சிவமெனவே நிற்கும். ‘அன்பும் சிவமும் ஒன்றே’ என்று திருமூலர் தம் திருமந்திரத்தில் உரைத்தபடி, சிவமெனவே தமக்கு முன்பு நிற்கும் யாவும் அன்புக்குரியதாகவே இயல்பாகவே ஆகிவிடுவதால், அத்தகையவர்கள் மட்டுமே அன்பை எப்படி கொடுப்பது என்று அறிந்து கொண்டவர் ஆவார்கள். அதன் மூலம் தாங்களும் அன்புக்குரியவர்களாகவும் ஆகிவிடுவார்கள்.
திருச்சிற்றம்பலம் 🙏

Leave a comment