
“இப்போது கிடைப்பது அப்போது கிடைத்துவிடும்” இப்போது எதையும் காணவில்லை என்றால், மரண நகரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை மட்டுமே நீங்கள் அடைவீர்கள் என்கிறார் சந்த் கபீர்தாஸ்.
இங்கு கபீர் தாஸ் ‘கிடைப்பது’ என்று குறிப்பிட்டது ஒருவருக்கு நிரந்தரமாக கிடைப்பதையேயே குறிப்பிடுகிறார். கற்ற கல்வி ஒரு நாள் மறந்து போகும், கிடைத்த செல்வம் களவும் போகும், கிடைத்த இளமை முதுமையாகும், கிடைத்த ஆரோக்கியம் குன்றும், கிடைத்த புகழ் மங்கும், கிடைத்த உறவுகள் பிரியும், கிடைத்த புண்ணியமும் குறையும் எனவே இவைகளை ஒருவர் தம் வாழ்வில் நிரந்தரமாக கிடைத்ததாக கருத்தில் கொள்ள முடியாது.

“அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை” என்று திருவள்ளுவர் தம் திருக்குறளில் சொல்லியுள்ள படி, ஒவ்வொருவருக்கும் இங்கு வாழும் போதே கிடைக்க வேண்டியது என்பது “அருள்” மட்டுமே ஆகும். அவ்வாறு அருள் கிடைத்தால், அருள் உலகில் நமக்கும் ஓர் இடம் உண்டு.
மாறாக, இங்கேயே அருளை காணாதவர்களுக்கு, கபீர் தாஸ் கூறியது போல் மரண நகரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு மட்டுமே கிட்டும்.

“அருளறியார் தமை அறியார் எம்மையும் பொருளறியார் எனப் புகன்ற மெய்ச்சிவமே” என்று வள்ளல் பெருமானும் அருளின் பெருமையைப் போற்றி பாடியுள்ளார்.
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏

