“இறப்பும், இருப்பும்”

ஸ்ரீ குருப்யோ நமஹ🙏
“இறப்பு என்பது முடிவும் அல்ல, இருப்பது என்பது நிரந்தரமும் அல்ல”?

நாம் தற்போது காணும் அல்லது இதுவரை கண்ட ஒவ்வொரு மனித உருவங்களும், கண்ணுக்குத் தெரியாத உலகில் வேர்களைக் கொண்டுள்ளன. வடிவங்கள் மாறலாம், ஆனால் சாராம்சம் மட்டும் அப்படியே இருக்கும். கண்ணுக்குத் தெரியாத இந்த சாராம்சம்  “மேலே வேரும் கீழே கிளைகளும் உள்ளது, அழிவற்றது, வேதங்கள் அதன் இலைகள், இதை அறிபவனே வேதத்தை அறிந்து  அழிவற்ற தன்மையை எய்துகிறான்” என்று பகவத் கீதை அத்தியாயம் 15: ஸ்லோகம் 1 ல், சொல்லப் பட்டிருக்கிறது.

இந்த தலைகீழான மரத்தைப் போலவே, ஒவ்வொரு மனிதனும் பிறக்கும்போது தலைகீழாகப் பிறக்கிறான், ஆனால் பல மறைக்கப்பட்ட மர்மங்களுடன்…
எனவே இந்த சாராம்சம் (மர்மம்) ஒருவரால் உணரப்படாத வரை,  வடிவங்களில் மாற்றம் ‘இறப்பு’ என்னும் நிகழ்வாக இடைவிடாது நிகழ்ந்து கொண்டேத்தான் இருக்கும். சாராம்சம் உணரப்பெற்றால்? பின்பு அங்கு உருவமாற்றம் நிகழாது, ‘இருப்பு’ நிரந்தரமாகிவிடும்.


அதாவது இருப்பு நிரந்தரமாகும் போது இறப்பு முடிவுக்கு வந்துவிடுகிறது.
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

Leave a comment