
சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்ஒளி மின்னும் தவனச் சடைமுடித் தாமரை யானே.
சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை:
“ஒன்றரை தெய்வம்” எது என்பதற்கு எங்கும் பரவி இருக்கும் காற்றே என்பது ரிஷி யாக்ஞவல்கியரின் கூற்று. சிவம் என்பது சிவனின் உருவமற்ற நிலை. அதுதான் தகப்பன் உடம்பிலிருந்து ஓர் விந்து அணுவாக, அரை தெய்வமாக தாயின் கர்ப்பத்தை நோக்கி நகர்கிறது. எங்கும் பரவி உள்ள காற்று, திருவாசியாக, ஒரு தெய்வமாக, நாதமாக, விந்தொடு கலந்து , “நாத விந்து கலாதீ நமோநம“ என்று அருணகிரிநாதர் பாடி உள்ளபடி, ஒன்றரை தெய்வமாகி, பின் சிவசக்தி வடிவாக தாயின் கர்ப்பத்திலிருந்து வெளிப்படுகிறது. இத்தகைய சிவத்தோடு ஒக்கும் தெய்வம், சக்தியாகிய திருவாசியை தவிர வேறு எதுவும் எங்கு தேடினும் இருக்கவே இருக்காது.
அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை:
இப்புவியில் உள்ள 84 லட்சம் வகையான ஜீவராசிகளில் “தெய்வம் மனுஷ்ய ரூபேண” என்பது போல் மனுஷ ரூபத்திற்கு ஒப்பான தெய்வம் யாவரும் இல்லை.
புவனம் கடந்தன்று பொன்ஒளி மின்னும் தவனச் சடைமுடித் தாமரை யானே:
இவனே உலகத்தையும் தாண்டிய பரவெளியில் ஆதிமுதலே, அதாவது பிறப்பிற்கு முன்பிருந்தே சூரியனைப் போன்ற ஒளியுடன் பிரகாசித்துக் கொண்டிருக்கிறான்.
திருச்சிற்றம்பலம்🙏

