
” கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார், அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும் போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.” :ஏசாயா 53:10
Interpretation:
ஏசாயா கூற்றின் படி ஒருவர் எந்த குற்றத்திற்கு நிவாரண பலியாக தம் ஆத்மாவை ஒப்புக் கொடுக்க இயலும்?
அதுவரை உலகம் ‘இருக்கு’ என்று தவறாக நம்பி, அதற்கு தம் ஆவியை(மூச்சை) ஒப்புக்கொடுத்த குற்றத்திற்காக!
அந்தக் குற்றத்திற்கு நிவாரணமாக எதை ஒருவர் கொடுக்க இயலும்?
‘ஞானத்தை போதிப்பவர் கர்த்தரே ஆவார்’ என்னும் பழைய ஏற்பாட்டில் உள்ள வாசகத்தின் படி, இம் மெய்ஞானத்தை குருவாய் வந்து போதித்து, அதன் மூலம் அவர்தம் ஆவியை (மூச்சை) திசை திருப்பி, உள்ளிருக்கும் கர்த்தராகிய தம் இருப்பில் விசுவாசம் கொள்ளச் செய்வதின் மூலம், அத்தகையவர் தமது ஆத்துமாவை குற்ற நிவாரணபலியாக தமக்கு ஒப்புக்கொடுக்கும் படி செய்து, அதன் வழியே அத்தகையவர் ‘உனக்கு முன்பாக என் சமூகம் செல்லும்’ என்று பழைய ஏற்பாட்டில் சொல்லி உள்ளபடி தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், மேலும் கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
Shri Gurupyo namah

