
1. ராமாயண காவியத்தில் முதன் முதலில் ஸ்ரீ ராமபிரானுக்கு விசுவாமித்திர மகரிஷியால் கொடுக்கப்பட்ட assignment ‘தாடகை வதம்’ தான். முதலில் ஸ்ரீராமபிரான் ‘தாடகை’ அரக்க குலத்தை சேர்ந்திருந்தாலும் அவள் ஒரு பெண் பாலாக இருப்பதால் சற்று தயங்கிய போது விசுவாமித்திர மகரிஷி ‘தாடகை’ பெண்ணாக இருந்தாலும் கொல்வதில் தவறில்லை ஏனெனில், ‘தாடகை’ என்பது ஒவ்வொருவர் உள்ளும் குடி கொண்டிருக்கும்-அகங்காரம் என்னும் individual ignorant and arrogant energy, என்றும், அவளை வதம் செய்வதில் தவறில்லை என்று எடுத்துரைத்து வதம் செய்ய வைத்தார்.
இதற்கு அடுத்ததாக வால்மீகி மகரிஷி ஸ்ரீ ராமபிரானின் திருவடி ஸ்பரிசம்பட்டு, அதுவரை அகங்காரம் காரணம் வெளிப்படாமல் இருந்த ‘அகலிகை’ என்னும் invisible intelligence and extreme blissful energy அதே ஒவ்வொருவர் உள்ளும் வெளிப்படுவதாக காட்சிப்படுத்தி உள்ளார்.
அதாவது ஒவ்வொருவர் உள்ளும் ‘தாடகை’ என்னும் தனிப்பட்ட அகங்காரம், அரக்க சக்தியாக குடிகொண்டு இருப்பதும், அதுவே ஸ்ரீ ராமபிரானால் அழிக்கப்பட்ட பின், ‘அகலிகை’ என்னும் பிரபஞ்ச சக்தியாக, அதாவது ஒளிக்கும் பராசக்தியாக ஸ்ரீ ராமனின் திருவடி ஸ்பரிசம்பட்டு, ஒவ்வொருவர் உள்ளிருந்தும் வெளிப்படும் என்னும் மெய்ப்பொருளை விளக்க வால்மீகி மகரிஷி ‘தாடகை, அகலிகை’ என்னும் இவ்விரண்டு கதாபாத்திரங்களையும், அடுத்தடுத்ததாக ஒன்றை அகங்கார சக்தியாகவும், மற்றொன்றை ஒளிக்கும் பராசக்தியாகவும், பெண் பாலாகவே வர்ணித்ததாக பொருள் கொள்ளலாம். ஏனெனில் ‘அகலிகை’ என்னும் பராசக்தி வெளிப்பட்ட பின், ஸ்ரீ ராமபிரான் அவளை வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டதாக வால்மீகி மகரிஷி குறிப்பிட்டுள்ளார்.

2.”கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.” என்னும் வள்ளுவர் பெருமானின் திருக்குறள் வாக்கின்படி, ஸ்ரீ ராமபிரானும் சீதா பிராட்டியாரும் அனைவராலும் வணங்கக்கூடிய ” என்னும் தகுதி கொண்டவர்கள்.
என்குணத்தான் என்னும் தகுதியை அடைவதற்கு முன்பு இருக்கும் காமம், குரோதம், துவேசம்,லோபம், மோகம்,மதம்,மாத்சரியம் போன்ற என்னும் ஏழு குணங்களும், அதுஅதற்க்கு உரிய தனித்தனி ஸ்வரங்களோடு, அதாவது ஏழு ஸ்வரங்களோடு சேர்ந்து தான் வெளிப்படும்.
இந்த ஈரேழு குணங்களும், ஸ்வரங்களும் சேர்த்து மொத்தம் 14 தன்மைகளையும் ஒருசேர வென்று ‘எண்குணத்தான்’ என்னும் வணங்கக்கூடிய தகுதியை பெறுவதற்காகவே, ராமபிரானும், சீதாப்பிராட்டியும் 14 வருடங்கள் ஒன்றாக, ஆனால் பிரம்மச்சரியத்துடன் கூடிய தவவாழ்க்கை மேற்கொள்ள கைகேயினால் வனவாசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டாள்.
இந்த ஈரேழு மொத்தம் 14 குணங்களையும், ஸ்வரங்களையும் வென்று அயோத்திக்கு திரும்பி வரும்போது ஸ்ரீ ராமபிரான் சீதாப்பிராட்டி இருவருமே ‘எண்குணத்தான்’ என்னும் இன்றளவும் அனைவராலும் வணங்கக் கூடிய தகுதிக்கு ஆளாக்கியதும், மேலும் பரதனை, ‘பரதழ்வார்’ என்னும் நிலைக்கு உயர்த்தியதும் கைகேயின் மூன்று வரங்களே, ஆகையால் அவள் தூஷிக்ககூடியவள் அல்ல!

