செந்தூர ஹனுமான்?

ஸ்ரீ ஹனுமான் வாயுபுத்திரன் அதாவது எல்லாவிதமான அங்கங்களும் பிராண-வாயு என்ற சூத்திரத்தினால் பிரியாமல் என்றென்றும் நிரந்தரமாக கட்டப்பட்ட தேகம் கொண்டவன், அதன் காரணம் சிரஞ்சீவித்துவம் பட்டத்தை பெற்றவன்.  “பிராணனும் சரீரமும், அன்னமும் அன்னதானமும் ஆகிறது” என்னும் தைத்தரியோ உபநிஷத் வாக்கின்படி ஸ்ரீ ஹனுமானுக்கு அப்பிராணவாயுவே உணவாகவும் அமைந்து விடுவதால், அவருடைய பிராணனும், சரீரமும் ஒன்றினில் ஒன்றாக ஒடுங்கி, ஒன்றாகவே என்றென்றும் இருந்து கொண்டிருக்கிறது.

சிவப்பு நிறம் கொண்ட செந்- தூள்கள் தான் மருவி செந்தூரம் அல்லது சிந்தூர் என்று ஆயிற்று. தேகத்தில் உள்ள சிவப்பு ரத்த அணுக்கள், எரித்ரோசைட்டுகள் அல்லது RBCகள் என்றும் அழைக்கப்படுகின்றன, அவை நுரையீரலில் இருந்து உடலின் திசுக்களுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் இரத்தத்தின் ஒரு அங்கமாகும் . அவை கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுவதற்காக நுரையீரலுக்குத் திருப்பி அனுப்புகின்றன.  

அவ்வகையில் ஸ்ரீ ஹனுமானின் சரீரம் முழுவதும் உணவாக ஒடுங்கியுள்ள பிராண வாயுவால் சிவப்பு அணுக்களும் அதே அளவில் நிரம்ப பெற்றுள்ளது. ஆகையால் தான் ஸ்ரீ ஹனுமானின் தேகம் முழுவதும்  செந்-தூள்கள் என்னும் செந்தூரம் பூசப்பட்டு, அதுவே அனுமானின் பிரசாதமாக எண்ணி நம் தேகத்திலும் பூசிக்கொள்ளும் போது, ஸ்ரீ ஹனுமானின் இணை பிரியாத பிராண சக்தி நம் தேகத்திலும் ஊடுருவும் என்னும் ஐதீகத்தில் இத்தகைய வழிபாட்டு முறையை சான்றோர்கள் ஏற்படுத்தி கொடுத்திருக்கலாம், மேலும் இது திருச்(செந்தூர்) முருகனுக்கும் கூட பொருந்தும்.
ஜெய் ஸ்ரீராம் 🙏

Leave a comment