
The true self will manifest on its own, and it is impossible for anyone to realize it through any kind of effort or by doing nothing. This pure Self, undividedly manifesting as ‘I,’ has been continuously emerging by itself through all human forms as consciousness of sound and light since its very beginning.
Mostly, all human beings may not fully understand this self-manifesting “I” for the reasons listed below.
The unbroken real attribute of “I,” that is, “There are no others,” is being perceived with each human being falsely when it is awake as a body consciousness. In other words, each human body sees true self’s attribute as a single bodily sensation, “I,” and also accepts, “There are similar others.”
Similarly, when dreaming, everyone perceives the same undivided real attribute of “I, that is, “there are no others,” possessing it as their individual mind consciousness body. In other words, each dreaming body perceives true self’s attribute as their individual mind’s bodily sensation, “I,” and also accepts, “There are similar others.
While in deep sleep, the same person experiences the quality of the real self, i.e., ‘there are no others,’ but he experiences this quality of the real self manifested in deep sleep as his personal physical body consciousness when he wakes up. As a result, its true attribute disappears, and it becomes, “There are others.” This happens because we fail to perceive its attribute in conjunction with its undivided ‘I’ object!
Finally, to understand the true self, that is, an undivided ‘I,’ one has to perceive it alongside its attribute, that is, ‘there are no others,’ at the very same time.
Sri Gurupyo namaha🙏
உண்மையான சுயம் தன்னிச்சையாக வெளிப்படும், எந்த விதமான முயற்சியின் மூலமோ அல்லது ஒன்றும் செய்யாமல் இருந்தோ அதை யாரும் உணர முடியாது. இந்த தூய்மையான சுயம், ‘நான்’ என்று பிளவுபடாமல், அதன் ஆதியிலிருந்தே ஒலி மற்றும் ஒளியின் உணர்வாக அனைத்து மனித வடிவங்களிலும் தொடர்ந்து வெளிப்பட்டு வருகிறது.
பெரும்பாலும், கீழே பட்டியலிடப்பட்டுள்ள காரணங்களுக்காக அனைத்து மனிதர்களும் இந்த சுய-வெளிப்பாடான “நான்” என்பதை முழுமையாக புரிந்து கொள்ளாமல் இருக்கலாம்.
“நான்” என்ற பிளவுபடாத உண்மையான பண்பு, அதாவது, “மற்றவர்கள் என்று ஒருவரும் இல்லை”, ஒவ்வொரு மனிதனிடமும் அது ஒரு உடல் உணர்வாக விழித்திருக்கும் போது பொய்யாக உணரப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒவ்வொரு மனித உடலும் சுயத்தின் உண்மையான பண்புகளை “நான்” என்ற ஒற்றை உடல் உணர்வாகப் பார்க்கிறது, மேலும் “இதே போன்று மற்றவர்களும் உள்ளனர்” என்பதை ஏற்றுக்கொள்கிறது.
அதுபோன்று, கனவு காணும் போது, ஒவ்வொருவரும் “நான்”, அதாவது “மற்றவர்கள் என்று ஒருவரும் இல்லை” என்ற பிளவுபடாத சுயத்தின் உண்மையான பண்பை தங்கள் தனிப்பட்ட மன உணர்வு கொண்ட உடலாக உணர்கிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கனவு காணும் ஒவ்வொரு உடலும் சுயத்தின் உண்மையான பண்புகளை அவர்களின் தனிப்பட்ட மனதின் உடல் உணர்வான “நான்” என்றே பார்க்கிறது, மேலும் “இதுபோன்றே மற்றவர்களும் இருக்கிறார்கள்” என்றும் ஏற்றுக்கொள்கிறது.
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, அதே நபர் உண்மையான சுயத்தின் பண்பை அனுபவித்தாலும், அதாவது ‘மற்றவர்கள் என்று ஒருவரும் இல்லை’ என்பது , ஆழ்ந்த தூக்கத்தில் வெளிப்பட்ட உண்மையான சுயத்தின் இந்த பண்பு அவர் விழித்தவுடன் அவரது தனிப்பட்ட உடல் உணர்வாக உணரப்படுகிறது. இதன் விளைவாக, அதன் உண்மையான பண்பு மறைந்து, அது ‘இதேபோன்ற மற்றவர்களும் உள்ளனர்.’ என்பதாக மாறிப் போய் விடுகிறது, ஏனெனில் பிளவுபடாத ,’நான்’ என்பதோடு சேர்ந்து அதன் தன்மை உணரப்படாததால் இவ்வாறு நிகழ்கிறது.
இறுதியாக, உண்மையான சுயத்தைப் புரிந்து கொள்ள, அதாவது பிரிக்கப்படாத ‘நான்’ என்பதை, அதன் பண்புடன், அதாவது ‘மற்றவர்கள் என்று ஒருவரும் இல்லை’ என்பதையும் ஒரே நேரத்தில் சேர்த்து ஒருவர் உணர வேண்டும்.
Sri Gurupyo namaha🙏

