“நாத விந்து கலாதீ நமோநம“

“நாத விந்து கலாதீ நமோநம“- திருப்புகழ்

ஒவ்வொருவர் உடலில் குடிகொண்டிருக்கும் உயிர் வித்து ‘விந்துவே’. அதன் இருப்பிடம் மூலாதாரம் என்னும் நாபிக்கமலம். ‘எல்லா உயிர் இனங்களின்  உயிர் வித்து நான்’ என்று விபூதி யோகத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் கூறுகிறார். அந்த  உயிர் வித்தை கட்டப் பயன்படும் ஒவ்வொருவரின் உடம்பும் ஒர் கயிறுக்குப் ஒப்பானதே. எனினும்  அவ்வளவு எளிதாக விந்து வடிவாய் இருக்கும் கிருஷ்ணன் இவ்வுடம்பின் கட்டுக்குள் வர மாட்டான். அதற்க்கு குரு உபதேசமான ‘நாதம்’ (மந்திரம்) வேண்டும். அவ்வாறு நாதத்தின் துணை கொண்ட உடம்பால் விந்து கட்டப்படும் போது, நாதமும், விந்துவும் கலக்கும் போது ஸ்ரீ கிருஷ்ணன் வசப்படுவான். இதை விளக்கவே ஸ்ரீமத் பாகவதத்தில் இந்த லீலை சொல்லப்பட்டுள்ளது.

வீட்டில் இருக்கும் தாம்புக் கயிற்றினை எடுத்து வந்து உரலில் கட்டி அதன் மறுமுனையை கிருஷ்ணனின் இடுப்பில் கட்ட யசோதை முயன்றாள். ஆனால், கயிற்றின் நீளம் சரியாக ஒரு ஜான் அளவு குறைவாக இருந்ததால் அது அவனை எட்டவில்லை. வீட்டிலுள்ள அனைத்துக் கயிறுகளையும் கொண்டு அவனைக் கட்ட முயன்றும் அதே ஒரு ஜான் அளவு குறைவாகவே  இருந்ததால் அவனை கட்ட முடியவில்லை. இதைக் கண்டு அங்கிருந்த கோபியர் அனைவரும் யசோதையைக் கண்டு நகைத்தனர். இதனால் தாய்மீது இரக்கம் கொண்ட கண்ணன் கயிறு எட்டும்படி தானே (நாதமாக) வந்தான். யசோதா அவனை உரலில் வைத்துக் கட்டினாள்.

ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏🏿

Leave a comment