‘இருவினைகளும் இறைவனும்’

 வினைகளால் உருவானதே ஒவ்வொரு மனித பிறவிகளும். அவ்வினைகள் இருவகையானது. முதல் வகை வினை என்பது, ஒரு கருவை உண்டாக்க இணையும் ஆண்,பெண் இவ்விரண்டு பேரின் இரு எண்ணங்களும், ஓர் வினையாய், கர்மவினையாய் கலந்து அக்கருவில் அடங்கும். இரண்டாவது வகை வினை என்பது, அக்கருவானது உண்டாகும் தருணத்தில், அக்கருவின் முன்ஜென்ம வினையானது, மூச்சுக் காற்றாக வந்து அக்- கருவோடு இரண்டறக் கலக்கும். இவ்- இருவினைகளின் சேர்க்கையே  மனித வடிவமாக உருவெடுக்கின்றது. 

ஈசன் இருக்கும் இருவினைககு அப்புறம்” என்பது திருமூலரின் திருமந்திரமும்,

ஈசன் என்னும் சிவம் இருப்பது இருவினைகளுக்கு உட்பட்டது அன்று! இரு வினைகளையும் கடந்து அப்புறம் இருக்கும் ‘பீசம்’ என்னும் மூலாதாரத்தில்! (பீசம் என்பதற்கு விதை; மூலம்; அண்டவிதை; சுக்கிலம்; என்று பொருள்கள் உள்ளன.) அதுவே உலகம் அனைத்திற்கும் பெரும் தெய்வமாக, ஒரே தெய்வமாக அருட்பெருஞ்ஜோதி வடிவில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. 

மேலும் இவ்-இருவினைகளையும் கெடுத்து மீண்டும் ஓர் உடம்புக்குள் புகாவண்ணம் காத்தருள்வான்  திருவேங்கடன் என்னும் பொருளில், “இன்றிபோக இருவினையும் கெடுத்து ஒன்றியாக்கைபுகாமை உய்யக்கொள்வான்” என்னும் நம்மாழ்வார் பாசுரமும்,

இவ்-இருவினைகளையும் சேரா இறைவனை, பொருளோடு அறிந்து சேர் என்னும் பொருளில்,  இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு என்னும் வள்ளுவரின் திருக்குறளும் இந்த  இருவினைகளையும் சேரா இறைவனைப் பற்றி விளக்குகிறது.

ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿

Leave a comment