“சக்தி பராசக்தி”

1.ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿 

இந்த நவராத்திரி புனித பண்டிகை தினத்தில் என் குரு மூலமாக கேட்டு,  கற்றதை “சக்தி பராசக்தி“ என்னும் தலைப்பில்  இங்கு பேசுவதற்கு  ஒரு சந்தர்ப்பத்தையும் உருவாக்கிய  வசந்தி மேடம் மற்றும் அவர்கள் குழுவினருக்கும், இதற்குரிய வசதிகளை சிறப்பாக உருவாக்கி, அதை நிரந்தரமாகவும் ஆக்கி கொடுத்த ஸ்ரீவஸ்தம் நிர்வாகத்திற்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள். 

2.“சக்தி- பராசக்தி”- இது -“பலா அதிபலா என்னும் காயத்ரி மந்திரமாகவே சாவித்ரியோ உபநிஷத்தில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் ரிஷி விசுவாமித்திரர்  ஸ்ரீராம லட்சுமணர்களை சரயு நதிக்கரையில் அமர வைத்து,  இந்த “பலா அதிபலா” என்னும் மந்திரத்தை  உபதேசித்ததாக  வால்மீகிராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 

2a. மேலும் திருமூலரும் தம் திருமந்திரத்தில்  மறை பொருளாக  இம்மந்திரத்தை சொல்லியுள்ளார்.

 “காயத் திரியே கருதுசா வித்திரி

ஆய்தற் குவப்பர் மந்திரமாங்கு உன்னி

நேயுத் தேரேறி நினைவுற்று நேயத்தாய்

மாயத்துள் தோயாத மறையோர்கள் தாமே“ என்று, அதாவது 

‘காயம்‘ என்பதற்கு ‘உடம்பு‘ என்று பொருள்கொள்ளலாம். பஞ்ச பூதங்களின் திரிபே ‘காயம்‘ எனும்உடலாக மாறியுள்ளது. ‘காயம்‘ மீண்டும திரிந்தால்அவை பஞ்ச பூதங்களின் தன்மையாகவே இருக்கும். காயத்ரி தேவி என்று அழைக்கப்படும் சாவித்திரி, உருவமற்ற பெண் தன்மை கொண்ட  கடவுளின்   ஆற்றல்மிக்க சக்தி. அச்சக்தியை தியானிக்க இரண்டு மந்திரங்கள்சாவித்திரியோ உபநிஷத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அவை பலா (சக்தி) மற்றும் அதி–பலா (பரா சக்தி) என்று அழைக்கப்படுகின்றன. இத்தகைய உருவமற்றசக்திமயமான மந்திரத்தை, ‘காயம்‘ திரிந்து இவ்வுடம்பை பஞ்ச பூதங்களின் தன்மைகளாக ஆக உணர்ந்தநிலையில்தான் ஜபிக்க இயலும். அவ்வாறு ஆராய்ந்துஅதன் பொருளை உணர்ந்து நாள்தோறும் இடைவிடாது இந்த மந்திரத்தை முறைப்படி ஜபித்து வருபவர்களே மறையோர்கள் என்று சொல்லப்படும் ‘அந்தணர்‘ என்னும் சொல்லுக்கும்  தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்பதாக இத்திருமந்திரத்திற்கு பொருளாக கொள்ளலாம்.

2.b இதை spiritual prime food என்றே வள்ளுவர் சொல்லியுள்ளார்.       பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. இது ஒரு உலகப் பொதுமறை நூல், யாவர்க்கும் பொருந்தும், Raghavendra Swamigal 

3. முதலில் எது ‘சக்தி’ என்பதை இங்கு பார்க்கலாம். அசையும் தன்மைகொண்டவைகள் எதுவோ அவையனைத்தையும் சக்தி என சொல்லலாம். இச் சக்தி அனைத்து ஜீவராசிகளிலும் காணப்படும். அதாவது மனித பிறவி உட்பட , இப்பூவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் 84 லட்சம் வகையான ஜீவராசிகளின்  ஒவ்வொரு அசைவுகளிலும் இச்சக்தி விளங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் இது மாறும் இயல்புடையது. அதாவது வெவ்வேறு விதமான பிறவிகளாக, அந்தந்த பிறவிகளின் உருவங்களுக்கு ஏற்றவாறு உள்ள சக்தியாக, ஒன்று மற்றொன்றாக என் மாறி மாறி வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த சக்தியை “பலா” என்றும் இதை ‘வ்யக்தம்’ அதாவது manifested strength என்றும் உபநிஷத் சொல்கிறது. 

4. ‘பராசக்தி’ என்பது எதுவாக இருக்கிறது என்று பார்த்தால் அசையும் தன்மை கொண்ட இவையாவையும், மாறாத அசையா நிலையில் இருந்து இயங்க வைப்பது எதுவோ அதுவே பராசக்தி ஆகும். சிதம்பரம் கோவிலில் உள்ள கனக சபையில் நடராஜப் பெருமானும் சிவகாமசுந்தரியும் மூலவராக வீற்றிருக்கும் கோலத்தை எல்லோரும் பார்த்து இருக்கலாம். அந்தக் கோலத்திற்கு வைக்கப்பட்ட பெயர் The Cosmic Dance of Nataraja with Sivagami. ஆனால் அதில் நடராஜப் பெருமான் மட்டுமே நடனமாடும் கோலத்தில் இருப்பார், சிவகாம சுந்தரி அசையா நிலையில்தான் இருப்பாள். ஏனெனில் அவள் அசையா நிலையில் still ஆக நின்றால்தான், அதன் சக்தியில் stillness ல் நடராஜபெருமானால் அசைய இயலும், தவிர சிவத்தால் தானே எந்தவொரு அசைவையும் உருவாக்கி கொள்ள இயலாது.

5. கவிஞர் கண்ணதாசனின் பாடலில் ஒரு வரி இவ்வாறு வரும். “அசையும் பொருளில் இசையும் நானே” என்று. உண்மையில் கண்ணதாசன் பாடலில் சொல்லப்பட்ட இவ்வரியானது சித்தர் பெருமக்களின் கூற்றே ஆகும். அதாவது அண்ட சராசரங்களில் உள்ள அனைத்து அசையும் பொருள்களின் உள்ளே அந்தர்யாமியாக, இசை சக்தியாக இருந்து கொண்டு அப்பொருட்களை அசைவிப்பது எதுவோ அதுவே ஆதிபராசக்தி ஆகும். அவளின் இசையில் தான் சிவத்தின் தாண்டவம் இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களின் வாயிலாக இடைவிடாது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மேலும்  ‘நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே’ என்னும் இந்த வரியும் அதே பாடலில் தான் வரும். அதாவது அசையும் பொருள்களின் அனைத்து ஆற்றல்களும், அசையா நிலையின் ஆற்றலில் இருந்தே வெளிப்படுகிறது என்பதை இதன் பொருள். இந்த சக்தியை “அதிபலா” அதாவது அவ் வ்யக்தம் unmanifested strength என்றும் உபநிஷத் சொல்கிறது.

6. ஈஷாவாஷ்ய உபநிஷத்தில் பிரஹ்மத்தின் நிலையை பற்றி இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது பிரம்மம் என்பது ஒரு supreme power. அதைப் பற்றி சொல்லும் போது அது ‘அசைகிறது அசைவதில்லை’ என்று. அசைகிறது என்பது சிவம், அசைவதில்லை என்பது சக்தி ஒன்று உருவம் உள்ளது மற்றொன்று உருவம் இல்லாதது.

7. இத்தேகம், மனம்,புத்தி,பிராணன், மற்றும் ஆனந்தம் என்ற பரவச நிலை என்ற இந்த ஐந்து கோஷங்களை உள்ளடக்கிய ஒவ்வொரு  மானுட தேகமும் சிவாம்சம் தான் அதாவது அசைகிறது என்னும் பிரம்மத்தின் உருவமுள்ள நிலை. இது மாறும் தன்மை கொண்டது. Kinetic energy என்று சொல்லலாம் இதுவே “பலா” என்னும் சக்தி என்று உபநிஷத் சொல்கிறது. ஒவ்வொரு மானுட தேகத்தினுள் அரூபமாக, அந்தரயாமியாக இருந்து கொண்டு தேகத்தின் அதாவது பஞ்ச கோஷங்களின் அனைத்து அசைவிற்கும் காரணமாய் இருந்து விளங்கிக் கொண்டிருக்கும் ஆதிபராசக்தி  பிரம்மத்தின் உருவமற்ற அசையா நிலை. அது நிலையானது. Potential energy என்று சொல்லலாம் இதுவே “அதி பலா” என்னும் அதீத சக்தி அல்லது பராசக்தி என்று உபநிஷத் சொல்கிறது. 

 8. அந்தர்யாமி என்று சொல்லப்படும் “அதிபலா” என்ற இந்த பரப்பிரம்ம சொரூபினியோட யதாஸ்தானம் என்பது ஒவ்வொருவர் தேகத்திலும் இருக்கும் ‘நாபிக்கமலம்’ என்று சொல்லப்படுகிற மூலஸ்தானம் தான். அங்கு அவளுடைய நாமம் ‘சிந்தாமணி’ என்று சித்தர்களால் அழைக்கப்படுகிறது. அங்குதான் அவள் சிந்தாமணியாக இருந்து கொண்டு “மாணிக்கத்துள்ளே மரகத ஜோதியாய்” என்று திருமூலர் தம் திருமந்திரத்தில்  சொல்லியபடி இடைவிடாது ஒளிர்ந்து கொண்டிருக்கிறாள். சிந்தாமணியாக விளங்கும் அவள் தேகத்திலிருந்து சிந்திப்போய் விட்டால் தேகம் அசைவற்று போய்விடும்.

9. மேலும் ஈஷாவாஷ்ய உபநிஷத் சொல்கிறது,  வ்யக்தம், அவ் வ்யக்தம் இரண்டையும் ஒன்றாக  வழிபட வேண்டும் என்று. Manifest என்பது முன்பு சொன்ன பஞ்ச கோஷங்களின் சக்தியாக வெளிப்படும் ஒவ்வொருவரின்தேகம், Unmanifest என்பது ஒவ்வொரு தேகத்தின் அசைவுக்கும் காரணமான, ‘ஒளிக்கும் பராசக்தியாக’ அவரவர்களின் நாபிக்கமலத்தில் அமர்ந்து விளங்கும் ஆன்மா எனப்படும் உயிர் ஆகும். 

10. வ்யக்தம் அவ் வ்யக்தம், Manifest Unmanifest,  இந்த உடம்பு உயிர், இவைகளாக இருக்கும் சக்தி, பராசக்தி இவ்விரண்டையும் சேர்த்து  வழிபட வேண்டும் என்று ஈஷாவாஷ்ய உபநிஷத் சொல்கிறது. சாவித்திரியோ உபநிஷத் இந்த சக்தி, பராசக்தியை, “பலா அதிபலா” என்னும் காயத்திரி மந்திரமாகவே சொல்லி வழிபடும் முறையை கொடுத்து இருக்கிறது.

11. அடுத்ததாக ராமாயணத்தில் முன்பு சொன்னபடி, ராமர் ஜனனமான பிறகு ரிஷி விசுவாமித்திரர் தாடகை வதற்காக அவரை அழைத்துச் செல்லும் வரை இடைப்பட்ட பகுதியில் எந்த விதமான சம்பவங்களும் பெரிதாக ராமரைப் பற்றி சொல்லப்படவில்லை. ராம லட்சுமணர்களை அழைத்துச் சென்ற ரிஷி விசுவாமித்திரர் அவர்களை சரயு நதிக்கரையில் அமர வைத்து,  அவர்களுக்கு இந்த “பலா அதிபலா” என்னும் மந்திரத்தை  உபதேசித்ததாக  வால்மீகிராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

12. இவ்வாறு உபதேசிக்கும் போது ரிஷி விசுவாமித்திரர் ஸ்ரீஇராமனிடம், பல்லாயிரக்கணக்கான வருஷங்கள் தவம் இருந்தாலும் கிடைக்காத இந்த “பலா அதிபலா” மந்திரத்தை உங்களுக்கு சொல்லிருக்கிறேன் என்பதாகவும் , திரு ராஜாஜி  அவர்கள் எழுதிய வால்மீகி ராமாயணத்தின் தமிழ் மொழி பெயர்ப்பில் படித்திருக்கிறேன்.

 13. ஒரு வகையில் சிந்தித்துப் பார்த்தால் தற்போது நடைமுறையில் இருக்கும் காயத்ரி மந்திரத்தையே ரிஷி விசுவாமித்திரம்தான் கண்டுபிடித்ததாக குறிப்பு இருக்கிறது. காயத்ரிக்கு மேலான மந்திரம் இல்லை என்றும் சொல்லப் படுகிறது. அவ்வாறு இருக்க ராம லக்ஷ்மர்களுக்கு இந்த “பலா அதிபலா” என்னும் மந்திரத்தை உபதேசித்து இது கிடைத்தற்கரியது என்று சொல்லக் காரணம் இதில் தான் முன்பு சொன்ன வ்யக்தம் அவ் வ்யக்தம் Manifest Unmanifest  இந்த உடம்பு உயிர், சக்தி  பராசக்தி என்ற இவ்விரண்டு தன்மைகளையும்  ஒன்றாக சேர்த்து வழிபடும் முறை இருப்பதால்! 

திருமூலர் திருமந்திரம், “உடல் உயிர் உண்மையென ஓர்ந்து கொள்ளாதோர், அதாவது  “வ்யக்தம் அவ் வ்யக்தம்” உடல் உயிர்  இரண்டையும் சேர்த்து வழிபடாதோர், கடலில் அகப்பட்ட கட்டையை ஒத்தாரே” என்று next, next என்று ஒரு பிறவி போய் ஒன்னொரு பிறவி என்று பிறவிப் பெருங்கடலில் grammer இல்லாமல் மிதப்பார்கள்.

திருவாசம்-புல்லாகி,பூண்டாகி என்று எவ்வாறு மாணிக்கவாசக பெருமான் தன் தேகத்தையே அப்பிறப்புக்கு முன் தாம் எடுத்த பல பிறப்புக்களை அறிந்து அதை திருவாசகமாக பாடினாரோ  அவ்வாறே!

அது போன்று ஒவ்வொருவருமே தாயின் கர்பத்தில் வாசம் செய்யும்போது அவரைப்போன்றே எல்லோருக்கும் அவள் அறிவிப்பாள். ஆனால் அப்போது ஏற்படும் வைராக்யம், பிறந்தவுடன் யோகமாயையால் மறக்கடிக்கப்படும்.

14. ஓங்காரி என்பாள் அவள்ஒரு பெண்பிள்ளை

நீங்காத பச்சை நிறத்தை உடையவள்

ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு

இரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே.

தாடகை-individual ignorant and  arrogant energy, அகலிகை- invisible intelligence and blissful எனர்ஜி, திருவடியே தஞ்சம் உள் தெளிவாரக்கே

ரா என்றால் பிரகாசமான ஜோதி + அதாவது இன்னொரு கண்ணதாசன் பாடலில் வரும்,’காவியத்தின் தலைவன் ராமனடி அவன் ஆவியில் நின்றவளோ ஒருத்தியடி அந்த அழகு மயில்பேர் சீதையடி’ என்றுசீதா massless photon ஃபோட்டான் energy, so soft but  so powerful and ‘the one only one’  

15.  ஸ்ரீராமனின் பராக்கிரமம் அனைத்தும் கூட அதன் பின்புதான் வெளிப்படுகிறது. அதாவது பரசுராமரை அடக்கியது முதல் வாலிவதம், இராவண வதம் போன்றவை எல்லாம்!! மேலும் வால்மீகி மகரிஷி  ராமர் சீதை இருவருக்கும் equal importance கொடுத்தது. சீதாராமா ஜெயம், ஸ்ரீராமா ஜெயம்.

16. தன்னை யறியத் தனக்கொரு கேடில்லை

தன்னை யறியாமல் தானே கெடுகின்றான்

தன்னை யறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே யர்ச்சிக்கத் தானிருந் தானே.

அம்பிகைக்கு ஓம் பஞ்சகோஶ அந்தர ஸ்தி²தாயை நம꞉ என்று ஓர் நாமம் அஷ்டோத்திரத்தில் வரும். அதற்கு 

 பஞ்சகோஶ – உடம்பில் உள்ள அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய ஆகிய பஞ்ச கோசங்கள்

அந்தர – மத்தியில் (ஆத்மாவாக, அந்தர்யாமியாக)

ஸ்தி²தாயை – இருப்பவளுக்கு

நம꞉ – நமஸ்காரம் என்று பொருள்.

“ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரில்” என்பது திருமூலரின் திருமந்திரச் சொல். இவ்வாறு பஞ்சகோசம்களுக்கு மத்தியில் இருக்கும் ஆதிபராசக்தி, ஒளிக்கும் பராசத்தியாக இருக்கிறாள். அவளேதான் இந்த பஞ்சகோசங்களையும் உருவாக்கி அதை ஒளிரச்செய்தும் கொண்டிருக்கிறாள்.

16 a . ஆக பிரகாசமே ஆத்மா, அதுவே எல்லாமே! எனவே மானுட வடிவத்தில் “பலா” என்னும் அசையும் சக்தியாக விளங்கும் உடல், மனம்,புத்தி,பிராணன், ஆனந்தம் என்ற இந்த பஞ்சகோசங்களையும், அசையா சக்தியான “அதிபலா” என்னும் பராசக்தியின் ஒளியின் பிரகாசமாகத்துடன் இணைத்து தியானித்தாக்கும் போது,

17. அதாவது இந்த நாமாவளிய சொல்லி அம்பாளை பூஜிக்கும் போது உண்மையில் அவரவர்கள் தனக்குள் அந்தர்யாமி யாக இருக்கிற அம்பாளை தாங்களே பூஜை செய்து கொள்வது போல் தான், அதாவது  “தன்னையே அர்ச்சிக்க தான் இருந்தானே” என்ற திருமந்திரத்தின் வாக்குப்படி. இந்த நாமாவை அறிந்து அர்ச்சிக்கும் போது, தன்னை அறியும் அறிவை அறிந்தவனாகி, அதன் மூலம் தன்னை அறிந்ததினால் கேடில்லாமல் அதாவது பிறவாமை என்னும் பேற்றை பெற்று உமையவளின் திருவடி சேரலாம்.

18. தேவி மகாத்மியம் ஸ்லோகம், யாதேவி ஸர்வ பூதேஷு புத்தி (சக்தி) ரூபிணே ஸம்ஸ்திதா , அதாவது  எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும் புத்தியாக, ஞானமாக இருக்கின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம். அதற்கு மேலும் உருவங்கள், நித்ரா ,பசி, திருவள்ளுவரின்  (மருந்தென வேண்டாவா) ச்சாயா ரூபேண,சக்திரூபேண(பலா), த்ருஷ்ணா(ஆசை) ரூபேண,பொறுமை, கருணை, திருப்தி, சிரத்தை, அபிராமிபட்டர் கலையாத கல்வியும், குறையாத வயதும் கேட்டு பயன் பெறலாம்.

possible for all, ரூபாரூபம்,  I is the name of the god, i am that i am, Sஓ Hum”, அவளேயகல் ஞாலம், 

18 a. ரமண பகவான்-தியாகராஜ சுவாமிகள் பெற்றதை பாடினார், 

உன்னை விடாமல் பிடித்துக்கொள், எவ்வாறு அறிவை அறிவால் அறியும்

ஊன்பற்றி நின்ற உணர்வு ஒரு மந்திரம், ஊன்-சக்தி, உணர்வு பராசக்தி, உடல் உயிர் உண்மை, next to that

நேரம் இருந்தால்? 

19. என் சிறு வயதில் இந்த நவராத்திரி பண்டிகையின் போது ஒரு முறை வாசல் நிலைப்படியை காலால் உதைத்த போது , அப்போது சில பெரியவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் இவ்வாறு, அதாவது அம்பாள் இந்த ஒன்பது நாட்களில் ஊசி முனை குத்தும் இடம் கூட பாக்கி இல்லாமல் எல்லாவற்றிலும் இருந்து தபஸ் செய்வதாக “தபசு காமாட்சி” என்று அழைக்கப்படுகின்றாள். ஐந்தணலிலே தன் இடக்காலின் கட்டை விரலின் நுனிப்பகுதி நடு அக்னியில் படும்படியும், வலது காலை இடது தொடைக்கு சற்றும் மேல் புறத்தில் இருக்குமாறும், இடது கரத்தை நாபிக் கமலத்திற்கு சற்று மேற்புறமாயும், வலது கரத்தில் ஜப மாலையுடன் இருந்து வலம்புரி சங்காக மாற்றுகிறாள்.

20.“ஒளிக்கும் பராசக்தி உள்ளே அமரில்

களிக்கும் இச் சிந்தையில் காரணம் காட்டித்

தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும்

அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே.” என்னும் திருமூலரின் திருமந்திரம் சொல்படி, ரிஷி யக்ஞ்வால்கியா, வள்ளலார், பத்ரகிரியார் knowledge to knowledge

அவளை அறிந்து கொண்டு வழிபடும் இத்தகைய வழிபாட்டின் மூலம் அவளும் அகத்தில்  மகிழ்ந்து அவரவர்களின் நாபிக் கமலத்தில் சிந்தாத  சிந்தாமணியாக, ஒளிக்கும் பராசக்தியாக என்றென்றும் நிலைபெற்று இருப்பாள்.

அதாவது ஒவ்வொருவரும் தம்முடைய உடல், மனம், புத்தி, பிராணன், இவைகளுடைய  அசைவுகளை சக்தியோட அம்சமாகவே நினைத்து உபாசித்தால், அவரவர் உள்ளிருக்கும் பிரம்மசக்தி என்னும் பராசக்தி தாமே வெளிப்பட்டு அருள்புரிவாள் என்பதுசத்தியம்.

21. ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿

Leave a comment