
The ability to observe without evaluating is the highest form of intelligence.
J KRISHNAMURTI
Interpretation:
Evaluation encompasses right and wrong, cause and effect, present and future. Dependent on knowledge. That means there can be no evaluation without knowledge. Non-evaluative observation can involve observing the source of knowledge prior to its evocation.
The gist of the Gayatri mantra is: “Before the knowledge manifests (which is the cause of every evaluation), let us meditate on the supreme light that induces it.”
Thus, one can consider intelligence’s ultimate ability to be observing the Gayatri mantra properly and incessantly.
மதிப்பீடு செய்யாமல் கவனிக்கும் திறனே புத்திசாலித்தனத்தின் மிக உயர்ந்த வடிவம்.- ஜே.கிருஷ்ணமூர்த்தி
மதிப்பீட்டில் சரி மற்றும் தவறு, காரணம் மற்றும் விளைவு, நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவை அடங்கும். அது அறிவைச் சார்ந்தது. அதாவது அறிவு இல்லாமல் மதிப்பீடு இருக்க முடியாது. மதிப்பீடு இல்லாத கவனிப்பு என்பது அறிவு தூண்டப்படுமுன் உள்ள மூலத்தை கவனிப்பதே என்று பொருள் கொள்ளலாம்.
காயத்ரி மந்திரத்தின் சாராம்சம்: “ஒவ்வொரு (மதிப்பீட்டிற்கும் காரணமான) அறிவு வெளிப்படுவதற்கு முன்பு, அதைத் தூண்டும் உயர்ந்த ஒளியைத் தியானிப்போம்.”
எனவே, காயத்ரி மந்திரத்தை முறையாகவும் இடைவிடாமல் கவனிப்பதே புத்திசாலித்தனத்தின் மிக உயர்ந்த திறன் எனக் கருத்தில் கொள்ளலாம்.
Sri gurubhyo namaha 🙏🏿

