“Grammar for true friendship”

youtube.com/clip/UgkxhvH0mSKSjT89gfOvK6fMZLZ2ynqXcpJK

ஶ்ரீகிருஷ்ணர், சுதாமருக்கும் (குசேலருக்கும்) தமக்கும் இடையே உள்ள நட்பை பற்றி பேசும் போது உண்மையான நட்பு என்பது ஏற்றத்தாழ்வு இல்லாதது சமதர்மம்கொண்டது என்று கூறியுள்ளார்.

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன

மடந்தையொடு எம்மிடை நட்பு.” குறள் 1122:

பொருள்: இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.

அதாவது உடம்போடு உயிர் கொண்டுள்ள நட்பு எவ்வாறு இணை பிரியாது சமதர்மமாகஇருக்கிறதோ, அத்தன்மையானது இம் மடந்தையோடு நாம் கொண்டுள்ள நட்பு என்று பொருள்.

ஆகையால் ஒவ்வொருவரின் உடம்போடு உயிர் கொண்டுள்ள நட்புதான், நட்புக்கு  முதல் இலக்கணம் என்பதாகிறது.

“The spirit is enthusiastic, while the body (flesh) is weak. said in the Bible, Matthew 26:41:

ஆவியோ (உயிரோ) உற்சாகமுள்ளது, மாம்சமோ (உடம்போ) பலவீனமுள்ளதுஎன்று பைபிளில் மத்தேயு: 26: 41  கூறப்பட்டுள்ளது. அவ்வகையில் உடம்போடு உயிர்க்கு உள்ள நட்பு என்பது சமதர்மம்இல்லாமல் ஏற்றத்தாழ்வுடன் இருந்து கொண்டிருக்கிறது என்று பொருளாகிறது.

எவரொருவருக்கு குருவின் திருவருள் கிட்டுகிறதோ? அத்தகையவரின் உடம்புக்கும், உயிருக்கும் இடையே உள்ள இவ் ஏற்றத்தாழ்வுகள் சரி செய்யப்பட்டு அதன் மூலம், உற்சாகமுள்ள ஆவியின் (உயிரின்) தன்மை உடல் முழுவதும் வியாபிக்கநட்பானது சமதர்மம் கொண்டதாக நட்பாக ஆகிவிடும்.

இவ்வாறு சமதர்மத்துடன்நிற்கக் கற்றவருடன் நட்பு கொண்டோரும் நாளடைவில் நட்பின் சமதர்மத்தைஉணரப்பெறுவார்கள்!

Leave a comment