“Be Still, And Know That I Am God”
இப்பிரபஞ்சமும் அதிலுள்ள உயிர்களும் தோன்றிய நாள் முதல் இன்றுவரை இடைவிடாது சதா ஆடிக்கொண்டுமாய் அசைந்து கொண்டுமாய் தான் இருக்கிறது. அதாவது உருவங்கள் அசையாவிடினும் மனம் அசைகிறது. மனம் அசையாவிடினும் பிராணன் அசைந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த ஆட்டத்திலும் அசைவிலும் கண்ணனை காண்பது என்பது இயலாத ஒன்று !
எப்பொழுது ஆட்டமும் அசைவும் நிற்கின்றதோ அக்கணமே ‘கண்ணன் வா’ என்று அழைக்காமலேயே வந்து நின்று ‘தான் யார்’ எனவும் அறிவிப்பான். அதாவது ‘நான்’ என்பது ஆட்டமும் அன்று அசைவும் அன்று என்னும் ‘ஞானம்’ சித்திக்கும்போது அக்கணமே அந்த அசைவற்ற நான் (I am that I am) என்னும் பரம்பொருள் தானே என கண்ணன் நின்று அருள் புரிவான் !!
யஜுர்வேதமும் இறுதியாக “நான் என்பதே சிவத்தின் பெயர்” என்று சொல்கின்றது!!!
சாய்ராம்.

