திருவாசகம்/ சிவபுராணம்-1

திருவாசகம்சிவபுராணம்


ஊனாய் உயிராய் உணர்வாய்என் னுட்கலந்து

தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய்

வானோ ரறியா வழிஎமக்குத் தந்தருளும்

தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர்

ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும்

கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய்.”

‘ஆனா’ என்பதற்கு நீங்காத என்று பொருள்.

ஓர் அறிவிலிருந்து, ஆறறிவு வரை எண்ணிலடங்கா உயிர்களுக்கெல்லாம் தலைவனாகிய சிவம், “ஆனா அறிவாய் ”

நீங்காத அறிவாய் இருக்கிறது. அதாவது இவ்வுடம்பு உருவாகும் முன்னரும், இவ்வுடம்பை விட்டு உயிர் பிரிந்த பின்னரும் நீங்காத அறிவாய் விளங்கும் சிவத்தை, இச்சமயமே அறிந்து கொண்டால்

அவ்வறிவு என்னும் சிவம் “ஊனாய் உயிராய் உணர்வாய்”

நம்முள்ளும் கலந்து நிற்க காணலாம்.

சாய்ராம்.

Leave a comment