வான்இன்று அமையாது ஒழுக்கு”
‘உலகு’ என்பதற்கு ‘உலகுயிர்கள்’ என்று பொருள் உள்ளது அதாவது பிறந்து பிறந்து இறந்து கொண்டிருக்கும் இவ்- உலகுயிர்கள் இன்றி இவ்-உலகம் என்பது இல்லை.
அவ்வாறு பிறப்பெடுக்கும் ஒவ்வொரு உலகுயிர்களிலும் ‘ஆகாயம், நிலம், காற்று, நெருப்பு’ என்னும் நான்கு பூதங்களும், ‘நீர்’ என்னும் ஐந்தாவது பூதத்தின் தன்மையில் கலந்து ஊணாக அதாவது மானுட உடம்புடன் கூடிய உயிராக உருவெடுக்கிறது.
அவ்வாறு உருவெடுக்கும் ஒவ்வொரு மனித உருவிலும் 70% நீரே உள்ளது. இந்-நீரே ஆகாயம், நிலம், காற்று, நெருப்பு ஆகிய மற்ற நான்கு பூதங்களுக்கும் உலகளாவிய கரைப்பானாக விளங்குவதால் இந்நீரின்றி உலகு என்னும் உலகுயிர்களுக்கு உடல் உருவாகாது.
‘வான்’ என்னும் பதத்திற்கு ‘மூலப்பகுதி’ என்று பொருள் உண்டு. இவ்வாறு நீரினால் அமையப்பெற்ற இவ்வுடம்பு இயங்க காரணமாக இருப்பது இவ்வுடம்பினில் மூலப்பகுதியாக குடிகொண்டிருக்கும் தூய உணர்வாகிய உயிரே ஆகும். இவ்வுடம்பை இடைவிடாது பற்றிய படியே இருக்கும் ‘வான்’ எனும் இத்தூய உணர்வைப் பற்றிய ஞானம் ஒருவருக்கு இல்லாத போனால்?
அவர்கள் யாராக இருந்தாலும் எவராக இருந்தாலும் அத்தகையோரின் உடம்பு கொந்தளிப்புள்ள இந்திரியங்களால் ஈர்க்கப்பட்டு ஒழுங்கு முறையற்ற வாழ்க்கைக்கு தள்ளிவிடும். மாறாக ஊன்பற்றி நிற்கும்
இத்-தூயஉணர்வோடு வாழ்பவரின் வாழ்க்கையானது என்றென்றும் ஒழுங்கு நிறைந்ததாகவே காணப்படும்.
வாழ்க தமிழ் 🙏 வாழ்க வள்ளுவம் 🙏

.jpeg)
