அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும் என்பது இக்குறளின் பொதுப்பொருள்..
For in the same way you judge others, you will be judged,
and with the measure you use, it will be measured to you.
bible :Matthew 7:2
“ஒளவியம் பேசேல்” என்கின்றது ஆத்திச்சூடி
ஒருவர் மற்றொருவரை குறை கூறும்போது அவருக்கு கிடைப்பது வெறும் அற்ப சந்தோஷமே !
இத்தகையோர் எக்குறையை மற்றவரிடத்தில் கண்டு அற்ப சந்தோஷம் கொண்டாரோ! அக்குறைப்பாட்டிற்கு தாமே ஆளாகும் சூழ்நிலை ஏற்ப்படின், அஃதினை மறைக்க எவ்வளவு எத்தனித்தாலும், இத்தகையோரால் பழி சொல்லுக்கு ஆளானவரின் திறனால் இக்குறைகள் வெளிப்பட்டே தீரும். அதற்கு மேலும் அப்பழிச்சொல்லுக்கு ஆளானவர்களால் இக்குறைகள் பலவிதமாக திரிக்கப்பட்டு பலவிதமாக விமர்சிக்கப்படும் தருணத்தில், இப் புறம்கூறுபவர்கள் அடையும் வேதனைகள் !!
இவர்கள் முன்பு அடைந்த அற்ப சந்தோஷத்தை காட்டிலும் பன்மடங்கு அதிகமாக அதிகரித்துக்கொண்டே கொண்டேயிருக்கும் !!!
இவ்வாறு புறம்கூறுதலினால் ஒருவருக்கு என்நன்மையும் எக்காலத்தும் கிட்டாது என்பதை வள்ளுவர் இக்குறள் மூலம் உலகிற்கு வழங்கியுள்ளார்.
சாய்ராம்


