Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 29 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏காணநில் லாய்அடி யேற்குஉறவுஆருளர்நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்கோணநில் லாத குணத்தடி யார்மனத்துஆணியன் ஆகி அமர்ந்துநின் றானே. காணநில் லாய்அடி யேற்குஉறவுஆருளர்:பிரஹத்ஹாரண்யகோ உபநிஷத்: 2-5-19 ல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது.ரூபா ரூபம்-ப்ரதிரூபோ-பபூ வ தத்ஸய ரூபம் ப்ரதிசஷ்ணாய!அப் பரம்பொருள் ஒவ்வொரு உருவத்திலும் அதே உருவமாகவே ஆயிற்று. அவ்விதம் உருக்கொண்டது தன்னை வெளிகாட்டுவதற்காக! என்று. இவ்வாறு ஒவ்வொரு உருவிலும் “இருக்கு” என்னும் சப்த ஸ்வரூப உணர்வாக, அதனதன் உருவினில் உருவாக, ஆனால் காண்பதற்கு அரிதிலும் அரிதாக இருக்கும்…
