Category: Psychology
-
You Are That!- “courageous with love”
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது என்பது இக்குறளின் பொதுப்பொருள். பொதுவாக வீரம் எனப்படுவது தம்மை தாக்க வருபவர்களைகண்டு அஞ்சாமல் எதிர்த்து, தம்வீரத்தை வெளிப்படுத்தி வெற்றி கொள்வதேயாகும். எதிர்ப்பவர்களின் உயிரைப்பறிக்கக்கூட தயங்காத அத்தருணத்தில் அன்பு எவ்வாறு துணையாகும் ? கம்பராமாயணம்: ‘ஆள்ஐயா! உனக்குஅமைந்தனமாருதம்அறைந்த பூளைஆயினகண்டனை; இன்றுபோய், போர்க்கு நாளைவா’ எனநல்கினன்–நாகுஇளங்கமுகின் வாளைதாவுறுகோசலநாடுடைவள்ளல். யுத்தத்தில் நிராயுதபாணியாகநிற்கிறான் இராவணன்.வீரத்தை வெளிப்படுத்தும்…
