Category: Psychology
-
“கடிவது மற”
“கடிவது மற” -ஆத்திச்சூடி“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு”. நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது என்பது இக்குறளின் பொதுவிளக்கம். தீயானது ஒருவரை தீண்டிடின் அதனால் உருவாகும் விளைவுகள் அவரது தேகத்தின் வெளிப்புறத்தை காயப்படுத்தி, கண்களுக்கு தென்படாத வகையில் அவரது தேகத்தின் உட்புறத்திலும் பாதிப்பை உருவாக்கும். ஆயினும் தகுந்த மருத்துவ சிகிச்சைகள் மூலம் அத்தேகத்தின் உள்வெளியில் உள்ள இருபுற புண்களையும் குணப்படுத்திவிடலாம்.…
