Category: சைவம்
-
அப்பர் தேவாரம் :1072
“ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதுஎலாம்நான் நிலாவி இருப்பன், என் நாதனை;தேன் நிலாவிய சிற்றம்பலவனார்வான் நிலாவி இருக்கவும் வைப்பரே.”என்பது அப்பர் பெருமானின் தேவாரப் பாடல் எண் :1072 விளக்கம்:ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதுஎலாம்:ஊன் எனும் உடலும், கண்களும் தானாகவே உணர்வதோ பார்ப்பதோ இல்லை; இவ் உடலுக்குள் இருக்கும் ஆவி எனும் உயிர் சக்தியாலேயே அவைகளால் அவ்வாறு இயங்க முடிகிறது. அதேபோல் இவ் ஊனுக்குள் உள்ள வாய், காதுகள், மூக்கு, மனம், புத்தி, சுவாசம் மற்றும் இன்பம் ஆகியவைகள் தாமாக…
