Category: சன்மார்க்கம்
-
You Are That! – “deserving of change”
“சாமாறு அனைத்தும் தவிர்த்து இங்கு எனக்கே ஆமாறு அருளிய அருட்பெருஞ்ஜோதி” (205) சா-என்பதற்கு சாதல் என்றும், மாறு-என்பதற்கு பிறவி என்றும் பொருள் உள்ளது. ஆ-என்பது அழிவில்லாத ஆன்மாவை குறிக்கும் சொல். மாறு-என்பதற்கு ஒன்றை மற்றொன்றாக மாற்றுதல் என்றும் மற்றொரு பொருள் உள்ளது. “சாமாறு அனைத்தும் தவிர்த்து”- இறந்து இறந்து மீண்டும் மீண்டும் வெவ்வேறு விதவிதமான பிறவிகளாக மாறி மாறி பிறப்பெடுக்கும் அவலநிலைகள் அனைத்தையையும் நீக்கி, “ஆமாறு”- அழிவற்ற ஆன்மாவாக என்னை மாற்றி அருளிய அருட்பெருஞ்ஜோதி. சாய்ராம்.
