You Are That! -“Non-originator”

“எல்லையில் பிறப்பெனும் இருங்கடல் கடத்திஎன்

அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி”

(அகவல்:15)

ஒவ்வொரு மனித உருவும் கோடிக்கணக்கான உயிர்அணுக்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வடிவமைக்கப்பட்ட இவ் உடம்பில் ஒரு நிமிடத்திற்கு 96 மில்லியன்(ஒரு மில்லியன் என்பது 10 லக்ஷம் எண்ணிக்கை உடையது) உயிர் அணுக்கள் இறந்தும், அதே அளவு எண்ணிக்கையில் 96 மில்லியன் உயிர் அணுக்கள் புதுப்பிக்கவும் படுகின்றன. இது ஒரு விஞ்ஞான கூற்று.
அதாவது எந்த அளவு எண்ணிக்கையில் ‘படைத்தல்’ நிகழ்கின்றதோ, அதே அளவு எண்ணிக்கையில் ‘இறப்பு’ அல்லது அழித்தல் என்பதும் இத்தேகத்தில் இடைவிடாது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வள்ளல் பெருமான் படைத்தல், அழித்தல் என்று இடைவிடாது நடந்தது கொண்டிருக்கும் இவ்விரு நிகழ்வுகளைதான்

இருங்கடல்’ என்று குறிப்பிடுகிறார். அதே போன்று ‘பிறப்பு’ என்னும் கடலுக்கு ‘இறப்பை’ ஓர்எல்லையாகவும், ‘இறப்பு’ என்னும் கடலுக்கு ‘மீண்டும் பிறத்தல்’ மற்றொரு எல்லையாகவும் குறிப்பிடுகிறார்.
மேலும் பிறப்பெனும் ஆரம்ப எல்லையும், இறப்பெனும் முடிவு எல்லையும் ஒன்றேயாம்.

“ஆதியும் அந்தமும் அறிந்தனை நீயே

ஆதி என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:267)

‘ஆதிஅந்த’ எல்லைகளை அறிந்த அருட்பெருஞ்ஜோதி, பிறப்புக்கும் முன்னே உள்ள எல்லையில்ஆதியாய்’ நின்று அருளி, இவ்-இருங்கடல் கடத்தி என் அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி என்னும் பொருளோடு வள்ளல் பெருமான் இவ்-அகவலை அருளியுள்ளார்.

“இனிப் பிறவாநெறி எனக்களித்த அருளிய

தனிப்பெரும் தலைமைத் தந்தையே தந்தையே”

(அகவல்:1163)

சாய்ராம்.

Leave a comment